

தமிழகத்தில் கேரள எல்லைப் பகுதி கள் மற்றும் மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் இடங்களில் ஓணம் பண்டிகை களைகட்டி யுள்ளது. அத்தப்பூ கோலமிட்டும், ஓண ஊஞ்சல் ஆடியும் பெண்கள், சிறுமியர் உற்சாகத்துடன் ஓணத்தை வரவேற்று வருகின்றனர்.
மலையாள மொழி பேசும் மக்க ளின் முதன்மை பண்டிகையாக ஓணம் விளங்குகிறது. ஆவணி மாதத்தில் வசந்தகாலமாக கருதப் படும் நெல் அறுவடை தொடங்கும் தருணத்தில் இவ்விழாவைத் தொன்று தொட்டு கேரள மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். அஸ்தம் நட்சத்திரமான செப்டம்பர் 4-ம் தேதி ஓணம் கொண்டாட்டம் தொடங்கியது.
திருவோணம் நட்சத்திரமான வரும் 14-ம் தேதி ஓணம் கொண்டாடப்படுகிறது. ஓணத்தை முன்னிட்டு கேரளாவில் 11 நாள் கொண்டாட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன. முதல் நாளில் இருந்தே வீடுகள் முன்பு பூக்களா லான அத்தப்பூ கோலம் இட்டு வருகின்றனர். தமிழகத்தில், கேரள மாநிலத்துடன் ஒட்டிய கன்னியா குமரி, கோவை, நீலகிரி, தேனி உட்பட பல மாவட்டங்களிலும் ஓணத்தை வரவேற்கும் நிகழ்வுகள் கோலாகலமாக நடந்து வருகின் றன. கன்னியாகுமரி மாவட்டத் துக்கு ஓணம் பண்டிகையான வரும் 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஓசூர் கிரேந்தி
ஓணத்தை முன்னிட்டு பூக்களால் வரையப்படும் அத்தப்பூ கோலத் துக்கு உரிய வண்ண மலர்களுக்கு தேவை அதிகரித்து உள்ளது. இதனால் அருப்புக்கோட்டை, ஓசூர், உதகை, பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து பூக்கள் அதிக அளவில் வரவழைக்கப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டம், தோவா ளையில் உள்ள மலர்ச் சந்தைக்கு கடந்த 3-ம் தேதியில் இருந்தே பூக்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக மஞ்சள் மற்றும் அடர் மஞ்சள் நிறத்திலான கிரேந்தி பூக்களுக்கு அதிக மவுசு உள்ளது. இங்கு கேரள வியாபாரிகள் பூக்களைக் கொள்முதல் செய் வதற்காக அதிகாலையிலேயே குவிகின்றனர். தோவாளை மலர் சந்தைக்கு மட்டும் தினமும் 10 டன்னுக்கு மேல் ஓசூர் கிரேந்தி குவிகிறது.
இது தவிர அத்தப்பூ கோலத் துக்கு பயன்படும் கோழிகொண்டை, வாடாமல்லி, சம்பங்கி, துளசி, கொழுந்து போன்றவற்றுக்கும் நல்ல மவுசு உள்ளது. அத்தப்பூவுக்கு அழகூட்டும் வகையில் உள்ள ரோஜாவுக்கும் நல்ல வரவேற்பு உள்ளதால் ஓசூர், பெங்களூரு, உதகை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு வகை வண்ண ரோஜாக்கள் தோவாளை மலர் சந்தைக்குக் குவிகின்றன.
மதங்களைக் கடந்தது
மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் தாமோதரன் கூறும் போது, “மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? என்பதைப் பார்ப்பதற்காக திருவோணத் தன்று ஒவ்வொரு இல்லத்துக்கும் மன்னர் மகாபலி வருவ தாக ஐதீகம். அவரை வரவேற்கவே மக்கள் அத்தப்பூ கோலமிடுகின்ற னர். பலவகை உணவு பதார்த் தங்களைப் படைக்கின்றனர். கேரளா வில் மதங்களைக் கடந்து அனை வராலும் கொண்டாடப்படும் ஓணம் தான் முதன்மை பண்டிகையாக உள்ளது” என்றார்.