

மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக கூறி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் ரூ.84.24 கோடி வசூலித்ததாக வேந்தர் மூவீஸ் மதன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மோசடி வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், 179 நாட்களுக்கு பிறகு மதனை கைது செய்தனர். இந்நிலையில் ரூ. 84.24 கோடி அளவுக்கு சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக மதனை அமலாக்கப்பிரிவினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று சென்னை 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி அருள்முருகன் முன்பு நடந்தது. அப்போது மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.