Published : 09 May 2017 09:15 AM
Last Updated : 09 May 2017 09:15 AM

மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது: 10 மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் ஒதுக்கீடு- பொதுப் பிரிவினருக்கு இன்று தொடங்குகிறது



மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக் கான கலந்தாய்வு சென்னையில் நேற்று தொடங்கியது. மாற்றுத் திறனாளிகள் பிரிவு கலந்தாய்வில் 10 பேர் கல்லூரியில் சேருவதற்கான அனுமதிக் கடிதத்தை பெற்றனர்.

தமிழகத்தில் 21 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்ட மேற்படிப்புகள் இருக்கின்றன. இங்கு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத இடங்கள் போக எம்டி, எம்எஸ் போன்ற மேற்படிப்புகளில் 562 இடங்கள் மற்றும் மருத்துவப் பட்டய மேற்படிப்புகளில் (டிப்ளமோ) 200 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் மாநில அரசுக்கு 19 பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பு (எம்டிஎஸ்) இடங்கள் இருக்கின்றன.

மருத்துவப் பட்ட மேற்படிப்பு களுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டுக் கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ தேர்வு அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடத்த திட்டமிடப்பட்டது. இதை யடுத்து மருத்துவப் பட்ட மேற் படிப்புகள் மற்றும் மருத்துவப் பட்டய மேற்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) நேற்று முன்தினம் வெளியிட்டது. ‘நீட்’ தேர் வில் தகுதி பெற்ற அரசு டாக்டர் கள் 1,800 பேர் உட்பட 4,294 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தனர். தரவரிசைப் பட்டியலில் முதல் 700 இடங்களை அரசு டாக்டர் களே பிடித்தனர். இதனால் மருத் துவப் பட்ட மேற்படிப்பில் 80 சதவீதத் துக்கும் அதிகமான இடங்கள் அரசு டாக்டர்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பல் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 627 பேர் இடம் பெற்றுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் பிரிவு

இந்நிலையில் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான கலந் தாய்வு சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மாற்றுத்திறனாளிகள் பிரிவுக்கான கலந்தாய்வு நடை பெற்றது. கலந்தாய்வில் கலந்து கொள்ள வருமாறு 4 அரசு டாக்டர் கள் உட்பட 11 பேர் அழைக்கப் பட்டிருந்தனர். ஆனால், 10 பேர் மட்டுமே வந்தனர். மற்றொருவ ருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துவிட்டதால் அவர் வரவில்லை. கலந்தாய்வில் பங் கேற்ற 10 பேரும் கல்லூரியில் சேருவதற்கான அனுமதிக் கடி தத்தை பெற்றனர். 13 அரசு மருத் துவக் கல்லூரிகளில் உள்ள மருத் துவப் பட்ட மேற்படிப்புகளில் 19 இடங்கள் மாற்றுத்திறனாளி களுக்கு உள்ளது. இவற்றில் 10 இடங்கள் நிரப்பப்பட்டு விட்ட தால், மீதமுள்ள 9 இடங்கள் பொதுப் பிரிவில் சேர்க்கப்படுகிறது.

மருத்துவப் பட்ட மேற்படிப்பு களுக்கு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. கலந் தாய்வில் பங்கேற்குமாறு அரசு டாக்டர்கள் உட்பட 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 11-ம் தேதி பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு பிறகு பல் மருத்துவப் பட்ட மேற்படிப்புக் கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x