மேட்டூர் தவிர வேறு எங்கும் கண்புரை அறுவை சிகிச்சை நிறுத்தப்படவில்லை: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

மேட்டூர் தவிர வேறு எங்கும் கண்புரை அறுவை சிகிச்சை நிறுத்தப்படவில்லை: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
Updated on
2 min read

சேலம் மாவட்டம் மேட்டூர் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கண்புரை அறுவை சிகிச்சை நிறுத்தப்படவில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள் ளார்.

சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு கூடியதும் திமுக உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன் (சேலம் வடக்கு), மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 23 பேருக்கு பார்வை பறிபோய் உள்ளது. அவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வரு கிறது என கேள்வி எழுப்பினார்.

அவருக்கு பதிலளித்து அமைச் சர் சி.விஜயபாஸ்கர் பேசியதா வது:

தமிழகத்தில் ஆண்டுதோறும் 5 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மேட்டூரில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுக்கு சுமார் 1000 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய் யப்பட்டு அவர்கள் நலமுடன் உள்ளனர்.

அண்மையில் மேட்டூரில் கண்புரை அறுவை சிகிச்சை செய் தவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது. எனவே, அவர்கள் சேலம், கோவை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டு உயர் சிகிச்சை வழங்கப் பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட 23 பேரில் 2 பேருக்கு மீண்டும் கண் பார்வை வந்துள்ளது. 17 பேருக்கு நோய்த் தொற்று கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. 4 பேருக்கு நோய்த் தொற்று சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட 23 பேருக்கும் தலா ரூ. 3 லட்சம் நிதி உதவியை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சிகிச்சை செலவு முழுவதையும் அரசு ஏற்றுள்ளது. அதிகமாக பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு பார்வை திரும்ப 3 மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிமுக உறுப்பினர் எஸ். செம்மலை (மேட்டூர்):

இது போன்ற சம்பவங்களில் கோரிக் கைகளை வந்த பிறகு அரசு நடவடிக்கை எடுப்பது வழக்கம். ஆனால், முதல்வருக்கு தகவல் கிடைத்த உடனேயே அமைச்சர் களை அனுப்பி பாதிக்கப்பட் டவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார். உடனடியாக உதவித் தொகை அறிவிக்கப்பட்டதுடன், சிகிச்சை செலவையும் அரசு ஏற்றுள்ளது.

ராஜேந்திரன் (திமுக):

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி யாக இழப்பீடு வழங்கப்பட்டதாக அதிமுக உறுப்பினர் கூறுகிறார். ஆனால், 1 மாதத்துக்குப் பிறகே இழப்பீடு அறிவிக்கப்பட்டது. அதுவும் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு போய்ச் சேரவில்லை. மேட்டூர் அரசு மருத்துவமனை யில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கம் சரியாக இல்லை என்கி றார்கள். கண் பார்வை பறிபோன வர்களுக்கு தலைக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:

என்ன காரணத்தினால் நோய்த் தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டறிய துறை ரீதியான விசார ணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்:

மேட்டூர் சம்பவத் துக் குப் பிறகு தமிழகம் முழுவ தும் அரசு மருத்துவமனைகளில் கண்புரை அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேட்டூர் அறுவை சிகிச்சை அரங்கில் குளிர்சாதன இயந்திரம் பழுதாகி இருந்ததால் நோய்த் தொற்று ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது. இது அரசின் கவனத்துக்கு வந்துள்ளதா?

அமைச்சர் விஜயபாஸ்கர்:

குளிர்சாதன இயந்திரம் பழுதா னதாக வந்த செய்தி தவறானது. மேட்டூர் அரசு மருத்துவமனையில் மட்டுமே கண்புரை அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின்:

திருவள்ளூர் மாவட்ட அரசு பொது மருத்துவ மனையில் கண்புரை அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாக அத்தொகுதியின் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:

இது உண்மையாக இருந்தால் அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in