ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் கைது

ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் கைது
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து நேற்று முன்தினம் 137 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதில், நெடுந்தீவு பகுதியில் ஒரு படகில் கணேஷ்குமார்(30), பிச்சைபாண்டி(46), முகமதுகான்(48), ராஜா(32) ஆகியோர் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 4 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in