நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் 3,362 பேர் விருப்பம்: ஜெயலலிதாவுக்காக 1,175 பேர் மனு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் 3,362 பேர் விருப்பம்: ஜெயலலிதாவுக்காக 1,175 பேர் மனு
Updated on
1 min read

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 3 ஆயிரத்து 362 பேர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர். மேலும் முதல்வர் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி 1,175 பேர் மனு கொடுத்துள்ளனர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் விருப்ப மனு கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏராளமானோர் மனு அளித்தனர். விருப்ப மனு கட்டணமாக ரூ.25 ஆயிரத்தையும் செலுத்தினர்.

27-ம் தேதியுடன் மனு பெறுவது முடிவடைந்தது. மொத்தம் 4 ஆயிரத்து 537 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் முதல்வர் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து தமிழகத்தில் 1,171 பேர், புதுச்சேரியில் 4 பேர் என மொத்தம் 1,175 பேர் மனு அளித்துள்ளனர்.

அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தமிழகத்தில் 3,343 பேர், புதுச்சேரியில் 19 பேர் என மொத்தம் 3 ஆயிரத்து 362 பேர் மனு அளித்துள்ளனர். விருப்ப மனுக்களின் கட்டணமாக 11 கோடியே 34 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்கள், அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளன.

3 ஆயிரத்து 362 பேர் மனு அளித்துள்ளனர். விருப்ப மனுக்களின் கட்டணமாக 11 கோடியே 34 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in