

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில், வேதாத்திரி மகரிஷியின் மனைவி லோகாம் பாளுடைய 102-வது பிறந்த நாள், மனைவி நல வேட்பு விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் விழாவில் பங்கேற்றனர்.
விழாவில், ஆழியாறு அறிவுத் திருக்கோயில் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் பேசும் போது, ‘‘உலகம் முழுவதும் தந்தை நாள், அன்னை நாள், கணவன் நாள், குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகின்றன. மனைவியின் சிறப்பைப் போற்றும் விதத்தில், ‘மனைவி நாள்’ என்று யாரும் கொண்டாடுவது இல்லை. சமூகத்தில் நிலவும் இந்த ஏற்றத் தாழ்வை போக்கும் விதத்தில் ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 30-ம் தேதி மனைவி நல வேட்பு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது’’ என்றார்.
உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் எஸ்.கே. மயிலானந்தன் பேசும்போது, ‘‘இல்லறத்தில் ஆன்மிக வாழ்வு என்பது தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தைகள் ஆகிய உறவுகளின் மீது அன்பு செலுத்துவதாகும். குடும்பத்தில் கணவன் மனைவி யிடம் அன்பில் குறைபாடு ஏற் படும்போது சிரித்துப் பேசி பழகினால் இருவரிடமும் அன்பு பெருகும்’’ என்றார்.
சிறப்பு விருந்தினர் பிரபல சித்த மருத்துவர் கு.சிவராமன் பேசும்போது, ‘‘உடலை ஆரோக்கி யமாக வைத்துக்கொள்ள மரபு வழி உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது துரித உணவுகளுக்கு வணிகக் குறியீடு பெறப்பட்டு வருகிறது. பல நூற்றாண்டுகளாக ஆரோக் கிய உணவு முறைகளைக் கடைபிடிக்கும் தமிழர்கள் எந்த உணவுக்கும் வணிகக் குறியீடு பெறவில்லை. 30 வயது முதல் 40 வயதுக்குள் சர்க்கரை நோயின் பாதிப்புக்கு உள்ளாகி வருபவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மனதை சந்தோஷமாக வைத்திருந்தால் சர்க்கரை நோய் பாதிப்பதில்லை என ஆய்வில் கூறப்பட்டுள்ளது’’ என்றார்.
விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதியினர் அருட்காப்பு, காந்த அலை பரிமாற்றம், சங்கல்பம் செய்துகொண்டனர். மனைவிகளின் வலது கை மீது கணவர்கள் கையை வைத்து, வாழ்த்துகளைத் தெரிவித்து கனி மற்றும் மலர் களைப் பரிமாறி தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.