

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:
தென்மேற்கு பருவமழை கர்நாடகம் மற்றும் கேரளத்தில் தீவிரமடைந்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 7 செ.மீ. தருமபுரி, நாமக்கல் சேந்தமங்கலம் மற்றும் பெண்ணாகரத்தில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வங்கக்கடலின் மேற்குப் பகுதி முதல் மையப்பகுதி வரையில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் மழைய பெய்யும். ஒருசில இடங்களில் கனமழை பெய்யலாம். சென்னையைப் பொறுத்தவரை, வானம் பொது வாக மேகமூட்டத்துடன் காணப் படும். மாலை அல்லது இரவு நேரங் களில் ஒருசில பகுதிகளில் மழையோ இடியுடன் கூடிய கனமழையோ பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.