Published : 11 Aug 2016 08:38 AM
Last Updated : 11 Aug 2016 08:38 AM

எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும்: திமுக கொறடா கோரிக்கை

சட்டப்பேரவையில் நேற்று சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்:

விஜயதாரணி (காங்கிரஸ் கொறடா):

சட்டப்பேரவை உறுப் பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்க நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. அதை நாங்கள் பரிந்துரைத்தால் வழங்குவதில்லை.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி:

தகுதியானவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. நீங்களும் தகுதி யானவர்களை பரிந்துரைத்தால் வழங்கப்படும்.

அமைச்சர் சரோஜா:

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.21.46 கோடியில் 3,707 பேருக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது.

அர.சக்கரபாணி (திமுக கொறடா):

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1.75 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப் பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக அப் படியே உள்ளது. அந்த நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். தற் போதுள்ள 235 உறுப்பினர்களுக்கும் நிதியை உயர்த்த வேண்டும்.

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:

235 உறுப்பினர்களுக்கும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று உறுப்பினர் சக்கரபாணி கேட்கிறார். உங்கள் கட்சிக்குதானே நீங்கள் கொறடா. எங்களுக்கு இல்லையே?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x