அரசு ஐடிஐ-யில் சேர மே 31 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

அரசு ஐடிஐ-யில் சேர மே 31 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

அரசு ஐடிஐ-யில் சேர மே 31 வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி (ஆண்கள்) மற்றும் கிண்டி (பெண்கள்), வடசென்னை மற்றும் திருவான்மியூர் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளுக்கு மாவட்ட அளவிலான கலந்தாய்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இதில், 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் சேரலாம். ஒவ்வொரு பாடப்பிரிவுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மே 31-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று அன்புச்செல்வன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in