மாணவர்களிடம் எந்தவிதமான கட்டணங்களையும் ரொக்கமாக வசூலிக்க மத்திய அரசு தடை: கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவு

மாணவர்களிடம் எந்தவிதமான கட்டணங்களையும் ரொக்கமாக வசூலிக்க மத்திய அரசு தடை: கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவு
Updated on
1 min read

மாணவர்களிடம் எந்தவிதமான கட்டணங்களையும் ரொக்கமாக வசூலிக்கக் கூடாது என்று அனைத்து கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித் துள்ளது.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழங்களில் மாணவர்கள் செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டணங்களையும் பெரும்பாலும் பணமாகவே செலுத்தி வருகிறார்கள். ஒருசில சமயங்களில் மட்டுமே டிமாண்ட் டிராப்ட், நெட் பேங்கிங் உள்ளிட்ட இதர வழிகளில் செலுத்துகிறார்கள். இந்த நிலையில், மாணவர்களிடம் எந்தவிதமான கட்டணங்களையும் ரொக்கமாக பெறக்கூடாது என்றும் மின்னணு பணப்பரிமாற்றம் (டிஜிட்டல் முறை) மூலமாக மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறு பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு (யுஜிசி) உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசின் இந்த உத்தரவை தொடர்ந்து, மாணவர் கட்டணம், தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டணங்கள், கல்வி நிறுவனங்களின் அன்றாட செயல்பாடுகள் தொடர்பான பணப்பரிமாற்றங்களும் மின்னணு பரிமாற்றம் மூலமாகவே செலுத் தப்பட வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி அங்கு படிக்கும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். மேலும், கல்வி வளாகங்களில் செயல்படும் உணவகங்கள் ரொக்க முறையை கைவிட்டுவிட்டு மின்னணு பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளுமாறு ஊக்குவிக்கப் பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ரொக்கமாக நடை பெறும் பணப்பரிமாற்றங்களை கண்டறிந்து அவற்றுக்குப் பதிலாக மின்னணு பணப்பரிமாற்ற முறையை நடைமுறைப்படுத்து வதற்கான வழிமுறைகளை ஆராயுமாறும் பல்கலைக்கழகங் களை யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இந்நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதை கண் காணிக்க அதற்கென தனி அதிகாரி ஒருவரை நியமித்து மாதந்தோறும் யுஜிசிக்கு அறிக்கை அனுப்புமாறு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in