காவிரியின் குறுக்கே தடுப்பணைகள்: மத்திய அமைச்சருக்கு தமிழிசை கடிதம்

காவிரியின் குறுக்கே தடுப்பணைகள்: மத்திய அமைச்சருக்கு தமிழிசை கடிதம்
Updated on
1 min read

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதிக்கு கடிதம் எழுதியிருப்பதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

காவிரியின் குறுக்கே தடுப்பணைகளை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தப் பிரச்சினை குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதிக்கு தமிழக பாஜக சார்பில் கடிதம் எழுதியுள்ளேன். இவ்விஷயத்தில் கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து நடக்க வேண்டும். தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அறிக்கையில் தமிழிசை கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in