

விநாயகர் சிலை கரைப்பின்போது பட்டினப்பாக்கம் கடற்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உருவான 120 டன் குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி யுள்ளனர்.
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை பட்டினப்பாக்கம் கடற் கரையில் கொண்டு வந்து கரைக்கப் பட்டன. இதுவரை சுமார் 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. இந்த சிலை களைக் கொண்டு வரும்போது, அவற்றின் மீதிருந்த பூ மாலை, கொடிகள், சிலைக்கு அணிவிக்கப் பட்டிருந்த ஆடைகள், அருகம்புல், மாவிலை தோரணங்கள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அகற் றும்படி, மாநகராட்சி அதிகாரி கள் மற்றும் போலீஸார் அறிவுறுத் தியதால், அவற்றை நீக்கிய பின் னரே விநாயகர் சிலைகள் கடலில் கரைக்க அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் விநாயகர் சிலை களில் இருந்த அலங்காரப் பொருட்கள் குப்பைகளாக பட்டினப் பாக்கம் கடற்கரை பகுதியில் போடப்பட்டன. அவற்றை அகற்றும் பணியில் தேனாம்பேட்டை மற்றும் அடையாறு மண்டல மாநகராட்சி அதிகாரிகள் கடந்த இரு நாட்களாக ஈடுபட்டனர். இதில் மொத்தம் 120 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
விநாயகர் சிலைகளுக்காக மரக்கட்டைகளால் செய்யப்பட்ட பீடங்கள், கடற்கரையிலேயே வீசி எறியப்பட்டு கிடக்கிறது. அதை அகற்றாதது தொடர்பாக, மாநக ராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அதை அப்பகுதி மீனவர்கள், விறகாக பயன்படுத்துவதற்காக அவற்றைச் சேகரித்து வைத் துள்ளனர். அதனால் அவற்றை அகற்றவில்லை என்றனர்.