Published : 13 Nov 2014 10:21 AM
Last Updated : 13 Nov 2014 10:21 AM

அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்தம்: வங்கிச் சேவைகள் முடங்கியதால் மக்கள் பாதிப்பு - தென்னிந்தியாவில் ரூ.1.75 லட்சம் கோடி காசோலைகள் தேக்கம்

ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாடு முழு வதும் வங்கிச் சேவைகள் நேற்று முடங்கின. இதனால் வாடிக்கை யாளர்கள், சிறு மற்றும் குறு தொழிற்துறையினர் பாதிக்கப்பட் டனர். தென்னிந்தியாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் ரூ.1.75 லட்சம் கோடி மதிப்புள்ள காசோலைகள் தேக்கமடைந்தன.

25 சதவீத ஊதிய உயர்வு, வாரத் துக்கு 5 நாட்கள் பணி என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 12-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்திருந்தன. இதுதொடர்பாக இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால், அறிவிக்கப்பட்டபடி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாடு முழு வதும் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழ கத்தில் 60 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் தேசிய மயமாக்கப் பட்ட அனைத்து வங்கிகளும், பழைய தலைமுறை தனியார் வங்கி களும் மூடப்பட்டன. இதனால், பண பரிவர்த்தனை முற்றிலும் முடங்கியது. வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். சென்னையில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் பெரும்பாலா னவை மூடப்பட்டிருந்தன. சில வங்கிகள் திறக்கப்பட்டிருந்தாலும், ஊழியர்கள் பணிக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டன. சில தனியார் வங்கிகள் மட்டும் செயல் பட்டன. வங்கிப் பணிகள் முடங்கிய போதும் ஏடிஎம் மையங்கள் செயல்பட்டன. வங்கி ஊழியர்கள் சங்கங்கள் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட் டம் நடந்தது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வெங்கடாசலம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு அமைப்பாளர் சி.எம்.பாஸ்கரன் உள்ளிட்ட ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

போராட்டம் குறித்து நிருபர்களிடம் வெங்கடாசலம் கூறியதாவது: வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதித்துள்ளது. தென்னிந்தியாவில் மட்டும் 1.75 லட்சம் கோடி மதிப்புள்ள 2 கோடியே 37 ஆயிரம் காசோலைகள் தேங்கியுள்ளன. கோரிக்கை நிறைவேறாவிட்டால், அடுத்தகட்டமாக டிசம்பர் 2, 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மண்டல வாரியாக போராட்டம் நடைபெறும். தமிழகத்தில் டிசம்பர் 2 ம் தேதி வேலைநிறுத்தம் நடத்தப் படும். அதன்பிறகும் எங்கள் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபடுவோம். எனவே, அரசு வங்கி ஊழியர்களின் பிரச்சி னையை மத்திய அரசு உடனடியாக தீர்க்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x