

சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை ராஜாஜி சாலையில் சுங்கத்துறை அலுவலக மான சுங்க இல்லம் செயல்பட்டு வருகிறது. பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதில் சுங்க அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், நேற்று இரவு திடீரென்று சுங்கத்துறை அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஐ அதிகாரிகள் சோதனையால் சுங்கத்துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.