Published : 02 Mar 2014 12:00 AM
Last Updated : 02 Mar 2014 12:00 AM

டெல்லியில் ராஜ்நாத் சிங் - சுதீஷ் சந்திப்பு

டெல்லியில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை தேமுதிக இளைஞர் அணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசியுள்ளார். கூட்டணி குறித்து இருவரும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க் கப்படுகிறது. தேர்தலைச் சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி, வேட்பாளர் தேர்வு என எல்லா கட்சிகளும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றன. பாஜக கூட்டணியில் மதிமுக ஏற்கெனவே சேர்ந்துவிட்டது. பாமக, தேமுதிக கட்சிகளும் பாஜக கூட்டணியில் சேரும் என பேசப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் காங்கிரஸ், திமுக கட்சிகளும் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருகின்றன. ஆனால், தேமுதிக இது வரை தனது முடிவை அறிவிக்காமல் மவுனம் சாதித்து வருகிறது. இது மற்ற கட்சிகளிடமும் தேமுதிகவினரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தங்கள் கூட் டணியில் தேமுதிக சேர்வது உறுதியாகிவிட்டதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் தேமுதிக இளைஞரணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசியுள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

தேமுதிகவின் முக்கிய நிர்வாகி டெல்லியில் எங்கள் கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கை கடந்த 27-ம் தேதி காலை சந்தித்துப் பேசினார். கூட்டணி குறித்து இரு வரும் சுமார் 20 நிமிடங்கள் பேசியுள்ளனர். தேமுதிகவை கூட்டணிக்கு வரவேற்பதாக எங்கள் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுக்க பாஜக மாநில நிர்வாகிகளுக்கே முழு அதி காரம் உள்ளது. எனவே, மாநில நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதி உடன்பாடு செய்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித் துள்ளார்.

இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்.

ஆனால், இந்தத் தகவலை தேமுதிக மறுத்துள்ளது. இதுதொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘இது உண்மைக்குப் புறம்பான செய்தி. இளைஞரணிச் செயலாளர் சென்னையில்தான் இருக் கிறார். தேர்தல் தேதி அறிவித்த பிறகே கூட்டணி அமைத்துப் போட்டி யிடுவதா, தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து இறுதி செய்யப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x