Published : 21 Aug 2016 10:05 AM
Last Updated : 21 Aug 2016 10:05 AM

தேசிய திறனாய்வுத் தேர்வில் ராம்கோ ஐடிஐ மாணவர் முதலிடம் பெற்று சாதனை

தேசிய அளவிலான திறனாய்வுத் தேர்வில் ராஜபாளையம் ராம்கோ ஐடிஐ மாணவர் மீண்டும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதுதொடர்பாக ராஜபாளையம் ராம்கோ தொழிற்பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி:

ராஜபாளையம் பிஏசி ராமசாமி ராஜா கல்வி அறக்கட்டளையால் ராம்கோ தனியார் தொழிற்பயிற்சி நிறுவனம் நடத்தப்படுகிறது. இதன் மாணவர்கள் ஆண்டுதோறும் தேசிய, மாநில அளவிலான திறனாய்வுத் தேர்வு களில் கலந்துகொண்டு, முதலிடம் பெற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஜனவரியில் 51-வது மாநில அளவிலான திறனாய்வுத் தேர்வு திருச்சியில் உள்ள அரசு ஐடிஐயில் நடத்தப்பட்டது. இதில் ராம்கோ தொழிற்பயிற்சி நிலையத்தின் எலக்ட்ரீஷியன் பிரிவு மாணவர் எம்.விக்னேஷ் முதலிடம் பெற்றார். அவருக்கு ரூ.25,000 ரொக்கப் பரிசு, சிறந்த மாணவர் என்ற சான்றிதழ், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த 51-வது தேசிய அளவிலான திறனாய்வுத் தேர்விலும் அவர் முதலிடம் பிடித்தார். இதற்காக, ரூ.50,000 ரொக்கப் பரிசு, சிறந்த மாணவருக்கான சான்றிதழ் மட்டுமின்றி, சிறந்த தொழிற்பயிற்சி நிலையம் என்ற சான்றிதழும் டெல்லி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தலைமை இயக்குநரால் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைதலுக்கான மத் திய அமைச்சகம் சார்பில் டெல்லியில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்விலும் எம்.விக்னேஷ் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்காக மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடியிடம் சாதனை விருதும், நினைவுப் பரிசும் பெற்றுள்ளார். முதலிடத்தில் வெற்றி பெற்றதற்கான ரொக்கப் பரிசு ரூ.1 லட்சம், மத்திய அமைச்சகம் மூலம் எம்.விக்னேஷுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.

முதலிடம் பெற்ற மாணவர் எம்.விக் னேஷ் மற்றும் பயிற்சி நிலைய முதல் வர், பயிற்றுவித்த ஆசிரியர்கள், பயிற்சி அலுவலர்களை ராம்கோ தொழிற் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா, தாளாளர் என்.கே.ராமசுவாமி ராஜா ஆகியோர் பாராட்டினர். ஆலத்தியூரில் உள்ள ராம்கோ சிமென்ட் ஆலையில் மாணவர் விக்னேஷ் பணியமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x