Published : 01 Jan 2016 10:02 AM
Last Updated : 01 Jan 2016 10:02 AM

2-ம் ஆண்டு நிறைவு விழா: 104 மருத்துவ சேவை மையம் மூலம் 5 லட்சத்து 86 ஆயிரம் பேர் பயன் - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

104 மருத்துவ சேவை மையத்தின் மூலம் 2 ஆண்டுகளில் 5 லட் சத்து 86 ஆயிரத்து 566 பேர் பய னடைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் தொடங்கப்பட்ட 104 மருத்துவ சேவை மையத்தின் 2-ம் ஆண்டு நிறைவு விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையில் நேற்று முன்தினம் மாலை நடந் தது. சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) கே.குழந்தைசாமி விழா வுக்கு தலைமை தாங்கினார். 104 சேவை மையத்தின் தலைவர் விஜயகுமார், விளம்பரப் பிரிவின் தலைவர் பிரபுதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் விழாவை தொடங்கி வைத்து சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். அதேபோல் 104 சேவை மையத்தின் மூலம் பயன டைந்த பயனாளிகளுக்கு பரிசு களை வழங்கினார்.

இந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசிய தாவது:

தமிழகத்தில் 2013-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி தொடங்கப்பட்ட 104 மருத்துவ சேவை மையம் வெற்றிகரமாக 2-ம் ஆண்டை கடந்து 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மருத்துவம் சம்பந்த மான தகவல்கள், ஆலோசனைகள், புகார்கள் பெறப்பட்டு அனைவருக் கும் சிறப்பான மருத்துவ சேவை களை வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மையத்துக்கு 14 லட்சத்து 93 ஆயிரத்து 372 அழைப்புகள் வந்துள்ளன. இதில் 5 லட்சத்து 86 ஆயிரத்து 566 பேர் பயனடைந்துள்ளனர்.

மருத்துவ ஆலோசனையில் 4 லட்சத்து 99 ஆயிரத்து 303 பேரும், மனநல ஆலோசனையில் 52 ஆயிரத்து 812 பேரும், சேவை மேம்பாட்டில் 12 ஆயிரத்து 100 பேரும் பயன்பெற்றுள்ளனர். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மையத்தின் மூலம் 2 ஆயிரத்து 66 பேர் பயன் பெற்றுள்ளனர். மேலும் மையத்தின் மூலம் 24 கண் தானங்களும், 2 முழு உடல் தானமும் வெற்றிகரமாக நடந்துள்ளன.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நடத்தப்பட்ட 73 ஆயிரத்து 457 மருத்துவ முகாம்கள் மூலம் 74 லட்சத்து 24 ஆயிரத்து 273 பேர் பயன் பெற்றுள்ளனர். இதனால் தமிழகத்தில் தொற்று நோய் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x