தமிழகம்
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வீதி நாடகம்
கோவை மாவட்ட சமூகப் பாதுகாப்புத் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீதி நாடகம் நடத்தப்படுகிறது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்சினைகளைத் தடுத்து, அவர்களைப் பாதுகாப்பது குறித்த வீதி நாடகத்தை ஆட்சியர் த.ந.ஹரிஹரன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை வட்டாரங்களில் உள்ள கிராமங்களில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தைத் திருமணம் தடுப்பு, குழந்தைத் தொழிலாளர் தடுப்பு, குழந்தை கடத்தல் தடுப்பு உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள் நடைபெற உள்ளன.
