

தமிழ்நாடு - கர்நாடகா இடையே சுமுகமான சூழ்நிலையை ஏற் படுத்த நடிகர் ரஜினிகாந்த் முயற் சிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் வேண்டுகோள் விடுத் துள்ளார்.
கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை களைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற தமிழிசை பேசியதாவது:
காவிரியில் இருந்து தமிழகத் துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங் களில் தமிழர்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
தமிழர்கள் தாக்கப்படுவதுடன், தமிழக பதிவெண் கொண்ட வாக னங்கள் சேதப்படுத்தப்படுகின்றன. பல இடங்களில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது. தமிழர் களுக்கு எதிரான தாக்குதலை பாஜக ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது.
கர்நாடகாவில் இருந்து சுமார் 1 லட்சம் தமிழர்கள் வெளி யேறியுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ரூ.200 கோடிக்கும் அதிகமான தமிழர் களின் சொத்துக்கள் சேதப்படுத் தப்பட்டுள்ளன. ஆனால், இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கர்நாடக அரசும், காவல்துறையும் நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளது கண்டிக்கத்தக்து.
கர்நாடகா முதல்வர் சித்தரா மையா தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர் களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். சேதமடைந்த தமிழர்களின் சொத்துகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு - கர்நாடகா இடையே சுமுகமான சூழ்நிலையை ஏற் படுத்த இரு மாநிலங்களுக்கும் பொதுவான ரஜினிகாந்த் போன் றவர்கள் முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு தமிழிசை பேசினார்.