

தமிழ்த் தேசிய பேரியக்கத் தலை வர் பெ. மணியரசன் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:
விளை பொருட்களுக்கு லாப விலை கிடைக்காததே விவசாயி களின் துன்பங்களுக்குக் காரணம். ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000, 1 டன் கரும்புக்கு ரூ.4,000 விலை நிர்ணயம் செய்ய வேண் டும். தமிழ்நாட்டை தனி உணவு மண்டலமாக்கி, இங்கு உற்பத்தி யாகும் விளை பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து கொள் முதல் செய்ய வேண்டும். பெட் ரோலியம், மீத்தேன், நிலக்கரி, ஷேல் காஸ் போன்றவற்றை காவிரி டெல்டாவில் எடுக்க தடை விதித்து, இதை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறி விக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலி யுறுத்தியும், உழவர்களைப் பாது காக்கவும் தமிழ்நாட்டின் பல பகுதி களில் ஜூலை 22 (நாளை), 23, 24 தேதிகளில் பிரச்சார இயக்கம் நடத்தப்படுகிறது என்றார்.