

வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்ய கூடுதல் கட்ட ணம் வசூலிக்கக் கூடாது என எண் ணெய் நிறுவனங்கள் உத்தரவிட் டுள்ள போதிலும், அவற்றை காஸ் ஏஜென்சிகள் மதிப்பதில்லை. இத னால் ஒரு சிலிண்டர் விநியோகம் செய்ய ரூ.50 முதல் ரூ.70 வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப் படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் பாரத், இண் டேன், இந்துஸ்தான் ஆகிய எண் ணெய் நிறுவனங்கள் மூலம் பொது மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படு கிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 2 கோடிக்கு மேற்பட்ட சமையல் எரி வாயு இணைப்பு பெற்ற வாடிக்கை யாளர்கள் உள்ளனர். காஸ் இணைப்பு பெற்ற நுகர்வோர் ஒரு சிலிண்டர் வாங்கிய 21 நாட்களுக்கு பிறகே அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்ய வேண்டும்.
எரிவாயு சிலிண்டர்களை பொது மக்களுக்கு காஸ் ஏஜென்சி ஊழியர் கள் வீடுகளுக்கு கொண்டுச் சென்று விநியோகிக்கின்றனர். அப்போது அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.50 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இதில் வாடிக் கையாளர்களே நேரடியாக காஸ் ஏஜென்சிக்கு சென்று சிலிண்டரை வாங்கினாலும் அதற்கும் கூடுத லாக ரூ.30, ரூ.50 என கூடுதல் கட்ட ணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ள போதும் அவற்றை சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் மதிப்பதில்லை. இது குறித்து, கொடுங்கையூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கூறியதாவது:
நான் 2 மாதத்துக்கு ஒருமுறை வீட்டு உபயோகத்துக்காக சிலிண்டர் வாங்குகிறேன். ஒவ்வொரு முறையும் சிலிண்டர் விநியோகம் செய்யும் போது ஏஜென்சி ஊழியர்கள் ரூ.50 கூடுத லாக வசூலிக்கின்றனர். வீடு தரைதளம், முதல் அல்லது 2-வது தளத்தில் இருந்தால் அதற்கேற்றார் போல் கட்டணம் வசூலிக்கின்றனர்.
அதிக கட்டணம் கொடுக்க முடியாது என்று மறுத்தால் அடுத்த மாதம் முதல் சிலிண்டருக்கு பதிவு செய்து காத்திருந்தால், பல நாட்களானாலும் சிலிண்டர்களை சப்ளை செய்யாமல் பழி வாங்குகின் றனர். இதுகுறித்து காஸ் ஏஜென்சிக ளிடம் புகார் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
பெரும்பாலும் சிலிண்டர் விநியோகம் செய்ய வரும் காஸ் ஏஜென்சி ஊழியர்கள் தினக் கூலி அடிப்படையில் பணியமர்த்தப் படுகின்றனர். இதனால் அவர்க ளுக்கு பணி அங்கீகாரம் இல்லை. இதனால் அவர்கள் மீது புகார் தெரிவித்தாலும் அவர்கள் மீது ஏஜென்சிகள் நடவடிக்கை எடுப்ப தில்லை. எனவே அவர்களுக்கு காஸ் ஏஜென்சிகள் அடையாள அட்டை வழங்குவதோடு, அவர்களுக்கான ஊதியத்தை வங்கிக் கணக்கு மூலம் வழங்க வேண்டும்.
இதன் மூலம் அவர்களுக்கு பணி அங்கீகாரம் கிடைக்கின்றது.
இவ்வாறு கார்த்திக் கூறினார்.
இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வாடிக்கையாளர்கள் எரிவாயு சிலிண்டரை விநியோகம் செய்யும் போது டெலிவரி ஊழியர்கள் கொடுக்கும் ரசீதில் குறிப்பிட்டுள்ள தொகையை மட்டும் கொடுத்தால் போதும். அதிக பணம் கேட்டால் ஏரியா மேனேஜர் 500, அண்ணா சாலை தேனாம்பேட்டை, சென்னை-18. என்ற முகவரிக்கு புகார் தெரிவிக்கலாம். மேலும் இலவச தொலைபேசி எண் 18002333555 என்ற எண்ணிலும், www.iocl.com, www.indane.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்’ என்றார்.