Published : 26 Aug 2016 08:48 AM
Last Updated : 26 Aug 2016 08:48 AM

வருமான வரித்துறை அலுவலர் மீது ஆசிட் வீசிய இளைஞர் கைது: நண்பருக்கு வலை - காதல் விவகாரம் காரணம் என தகவல்

வருமான வரித்துறை அலுவலர் மோகித் மீது ஆசிட் வீசிய இளைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையரகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த மோகித் என்பவர் பணியாற்றி வரு கிறார். இவர், சென்னை அண்ணா நகர் மேற்கில் உள்ள மத்திய வருவாய்த்துறை அலுவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 23-ம் தேதி இரவு வீட்டில் இருந்த மோகித் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயமடைந்த மோகித், சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். மோகித் கொடுத்த புகாரின் பேரில், திருமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க திருமங்கலம் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர் கள் தீவிர விசாரணை நடத்தி, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பிரபு (30) என்பவரை கைது செய்தனர்.

டிடிபி ஆபரேட்டர்

நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் டிடிபி ஆபரேட்டராக பணியாற்றி வந்த பிரபு, அங்கு பணியாற்றும் சக பெண் ஊழியர் ஒருவரை காதலித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு பிரபு வேலையில் இருந்து விலகவே, அந்தப் பெண் பிரபுவை தவிர்த்துவிட்டு மோகித்தை காதலிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த விஷயமறிந்த பிரபு, தனது நண்பரோடு சேர்ந்து மோகித் மீது ஆசிட் வீசியுள்ளார். கைது செய்யப்பட்ட பிரபு, நீதிமன் றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x