

லாரிகள் வேலைநிறுத்தப் போராட் டம் தொடர்பாக தமிழக அரசுடன் இன்று (3-ம் தேதி) மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது என மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வை ரத்து செய்ய வேண் டும். வாகனங்களுக்கான வரி, பர் மிட் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய லாரி உரிமையாளர் கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இந்நிலையில், மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி கூறியதாவது:
கடந்த 4 நாட்களாக நடை பெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் சரக்கு போக்கு வரத்து கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. பெட்ரோலிய டேங்கர் லாரி உரிமையாளர்களின் ஆதரவும் கோரப்பட்டுள்ளது.
கடந்த 30-ம் தேதி தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை யில் உடன்பாடு எட்டப்படவில்லை. தற்போது, பேச்சுவார்த்தைக்கு வரு மாறு தமிழக அரசிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது. இன்று (3-ம் தேதி) தலைமைச் செயலகத்தில் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது என்றார்.
சேலம் மாவட்ட லாரி உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் சென்ன கேசவன் கூறும்போது, “தமிழகத் தில் 4.50 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. இதனால், கடந்த 4 நாட்களில் ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சரக்குகள் வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் தேக்கமடைந் துள்ளன. மஞ்சள், இரும்புத் தகடு கள், கைத்தறி ஜவுளிகள், ஜவ் வரிசி, ஸ்டார்ச் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு செல்வது தடைபட்டுள்ளது. வேலை நிறுத்தத்தால் 50 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்” என்றார்.