Last Updated : 02 Jan, 2014 12:00 AM

 

Published : 02 Jan 2014 12:00 AM
Last Updated : 02 Jan 2014 12:00 AM

திராவிடக் கட்சிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு: புத்தாண்டில் களைகட்டும் அரசியல் விளையாட்டு

நாடாளுமன்றத் தேர்தல் நெருங் கும் நிலையில், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

புத்தாண்டின் தொடக்கத்தில் அரசியல் விளை யாட்டு களைகட்டும் என்கின்றனர் அரசியல் விமர்சர்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப் படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் தெரிவித்துள் ளார்.

கட்சிகள் தீவிரம்

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் அமைக்கும் பணியை கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை முக்கிய கட்சிகளான திமுகவும் அதிமுகவும் பொதுக்குழுவைக் கூட்டி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தின.

நாடாளு மன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை திமுக எடுத்துள்ளது. அதேபோல அதிமுக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதி களிலும் தனித்துப் போட்டி யிடுவதே நமது இலக்கு’ என்றார்.

அதேநேரத்தில் கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சித் தலைமைக்கு இரண்டு கட்சிகளின் பொதுக்குழு வழங்கி யிருக்கிறது.

“திமுக, அதிமுகவுடன் கூட்டணி பற்றி பேசவில்லை. அதேநேரத்தில், எங்கள் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்” என்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன். “நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி” என்று பா.ஜ.க. தேசியக் குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்திருக்கிறார்.

‘தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது’ என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வேதனைப் பட்டுள்ளார். அதேநேரத்தில், ‘கூட்டணி பற்றி இப்போது ஆரூடம் கூற முடியாது. தேர்தல் நெருங்கும்போது அரசியல் நாடகங்கள் அரங்கேறும்’ என்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன். சமூக ஜனநாயகக் கூட்டணியைத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ள பாமக, 5 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் களையும் அறிவித்து விட்டது.

தே.மு.தி.க.வுக்கு மவுசு

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப் பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருக்கிறார். மற்ற கட்சிகளைவிட, தேமுதிகவுக்குதான் இப்போது மவுசு கூடியிருக்கிறது. நாலா பக்கம் இருந்தும் அவர்களை கூட்டணிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேமுதிகவை தங்கம் பக்கம் இழுக்க பா.ஜ.க., திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. வரும் 5-ம் தேதி கூடும் தேமுதிக பொதுக்குழுவில் கூட்டணி பற்றிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சி கள் திமுக அணியிலும் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கட்சி கள் அதிமுக அணியிலும் இப்போதைக்கு தொடர்கின்றன. பெஸ்ட் ராமசாமி தலைமையில் செயல்படும் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று அறிவித்துவிட்டது. கூட்டணி பற்றி பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படும் என்கிறார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயலாளர் ஈஸ்வரன். ‘வரும் 10-ம் தேதி கூட்டணி பற்றி அறிவிக்கப் படும் என்று மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இதற்கிடையே, தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக புதிய அணி உருவாக வேண்டும் என்று கூறி வரும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், பா.ஜ.க. தலைமையில் மதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கொண்ட புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி திகழும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பிரஷாந்த் பூஷண் தெரிவித்துள்ளார். அதேபோல அதிமுக, திமுக கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, ‘மக்கள் பாதுகாப்புக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக சமூக சேவகர் டிராபிக் ராமசாமி அறிவித்திருக்கிறார்.

ஊழலுக்கு எதிரான அமைப்புகளின் கூட்டமைப்பு, நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது என்கிறார் ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் எஸ்.எஸ்.அரசு.

‘மக்கள் நலனுக்கான மாற்றம்’

இப்படி எல்லா கட்சிகளுமே புத்தாண்டின் தொடக்கத்தில்தான் ஒரு இறுதி முடிவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், ‘மக்கள் நலனுக்கான மாற்றம்’ என்ற கோஷத்துடன் ஜனவரியில் அரசியல் சதுரங்க விளையாட்டு சூடுபிடிக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்கின்றனர் அரசியல் விமர்ச கர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x