Published : 19 Sep 2016 10:09 AM
Last Updated : 19 Sep 2016 10:09 AM

நாடு சிறப்பாக திகழ ஆன்மிகம் அவசியம்: மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளி மலை இந்து தர்ம வித்யா பீடம் சார்பில், ஆண்டு தோறும் இந்து ஆலயங்களில் சமய வகுப்புகளில் பயன்று முதுநிலையை எட்டும் மாணவ, மாணவியருக்கு வித்யா ஜோதி பட்டங்கள் வழங்கப்படு கின்றன.

இதனையொட்டி 2016-ம் ஆண் டுக்கான வித்யா ஜோதி பட்ட மளிப்பு விழா மற்றும் 36-வது சமய வகுப்பு மாநாடு, குலசேகரம் எஸ்ஆர்கேபிவி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் மேகாலயா மாநில ஆளுநர் சண்முகநாதன் பேசியதாவது:

இமயம் முதல் குமரி வரை நாம் நமது பண்பாட்டையும், தர்மத் தையும் நிலை நாட்டி வாழ்கி றோம். இந்தியா மிகச்சிறந்த கலாச் சாரமும், பண்பாடும் கொண்ட நாடு என வெளிநாட்டு அறிஞர் கள் பாராட்டுகின்றனர். மத நல்லிணக்கத்துக்கு இலக்கணமாக இந்தியா திகழ்கிறது. அகிம்சை என்ற ஆயுதத்தின் மூலமே மகாத்மா காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் வரதட்சிணை கொடுமை இல்லை. பெண் சிசுக் கொலை இல்லை. ஊழல், லஞ்சம் இல்லாத புதிய இந்தியாவை உருவாக்க பிரதமர் அயராது பாடுபடுகிறார். ஒரு நாடு சிறந்த நாடாக திகழ வேண்டுமானால் ஆன்மிகம் அடித்தளமாக இருக்க வேண்டும். அதற்காக இன்னும் ஏராளமான துறவிகள் உருவாக வேண்டும். துறவிகள் நாடு முழுவதும் சென்று இளைஞர் களை தட்டி எழுப்பி அவர்களை சிறந்த மனிதர்களாக உயர்த்த வேண்டும்” என்றார்.

இந்து தர்ம வித்யாபீட தலைவர் சுவாமி சைதயன்யானந்தஜி மகராஜ் தலைமை வகித்தார். 31 பேருக்கு வித்யா ஜோதி பட்டங் கள் வழங்கப்பட்டன. நெட்டாங் கோடு ஆஸ்ரமம் யோகீஸ்வரி மீராபுரி மாதா பட்டமளிப்பு வேள்வி நடத்தினார்.

வித்யா பீட மாநில அமைப்பாளர் தங்கராஜ் வரவேற்றார். குலசேக ரம் பேரூராட்சித் தலைவர் ராதா தங்கராஜ் குத்துவிளக்கேற்றினார். கோவை ராமகிருஷ்ணா ஆஸ்ரமம் சுவாமி கேசவானந்தஜி மகராஜ், பள்ளித் தாளாளர் ஆர்.அப்பு நடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x