தமாகாவின் திருச்சி மாவட்ட புதிய தலைவர்கள்: வாசன் அறிவிப்பு

தமாகாவின் திருச்சி மாவட்ட புதிய தலைவர்கள்: வாசன் அறிவிப்பு
Updated on
1 min read

திருச்சி மாவட்ட தமாகா தலைவர் பொறுப்பை சாருபாலா தொண்டைமான் ராஜினாமா செய்ததையடுத்து புதிய தலைவரை ஜி.கே.வாசன் நியமித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ''திருச்சி மாநகர மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த சாருபாலா தொண்டைமான் தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்திருந்தார். அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், திருச்சி மாநகர மாவட்ட தமாகாவின் புதிய தலைவராக நந்தா கே. செந்தில்வேலும், திருச்சி தெற்கு மாவட்ட தமாகா-வின் புதிய தலைவராக திருச்சி டி.குணாவும் நியமிக்கப்படுகின்றனர். புதிய தலைவர்களுக்கு தமாகாவினர் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in