குரூப் 1 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் தகவல்

குரூப் 1 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் தகவல்
Updated on
1 min read

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக, குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்ட தாகவும், விரைவில் அதற் கான முடிவுகள் வெளியிடப் படும் எனவும் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தலைவர் கே.அருள்மொழி கோவையில் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் சார்பில் வட்டார சுகாதார புள்ளியியல் அலுவலர் பணிக் கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது.

இதனிடையே கோவை யில் தேர்வு மையங்களில் தமிழ்நாடு அரசு தேர் வாணையத் தலைவர் கே.அருள்மொழி ஆய்வு செய் தார். அப்போது அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

வட்டார சுகாதார புள்ளி யியல் அலுவலர் பணிக் கான 172 காலிப் பணி யிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடக்கிறது. தமிழகம் முழுவதும் 11,165 பேர் இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்வுக்கான அனைத்து வசதி களும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலமாக செய்யப்பட்டுள்ளன. நம்பகத் தன்மையை பாதுகாக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தகுதி, திறமை அடிப்படையில்தான் அனைவரும் தேர்வு செய்யப் படுகிறார்கள். எனவே அனை வரும் நம்பிக்கையுடன் தேர்வுகளை எழுத வேண் டும்.

அக்டோபர் மாதம் நான் பொறுப்பேற்றதற்குப் பிறகு 13 வகையான தேர்வுகள் நடத் தப்பட்டு, அவற்றின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன ஆனா லும், குரூப் 1, குரூப் 2 (நேர் முகத்தேர்வு இல்லாதது), கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வு போன்ற வற்றின் முடிவுகள் வெளியாக வில்லை. குரூப் 1 தேர் வைப் பொறுத்தவரை, கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள் ளப் பெருக்கின் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணி சற்று தாமதமானது. அதனை விரைந்து சரிசெய்து வருகிறோம். இந்த மூன்று தேர்வுகளுக்கான முடிவு களையும் விரைவில் எதிர் பார்க்கலாம். 2016 -17-ம் ஆண்டுக்காக டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் அடுத்த தேர்வுக்கான அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதுபவர்கள் தங் களை தயார்படுத்திக் கொள்வ தற்காக இந்த அட்ட வணை வெளியிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட வருவாய் அலுவலர் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in