

ஆவின் பால் விலை உயர்வைத் தொடர்ந்து ஆவின் நிறுவன தயாரிப்புகளான நெய், வெண்ணெய், இனிப்பு ஆகியவற்றின் விலைகள் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியது. இதைத் தொடர்ந்து ஆவின் நிறுவனத்தின் இதர பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளது. புதிய விலை நிலவரம்:
ஆவின் நெய் ஒரு கிலோ ரூ. 410, பாதாம் பவுடர் ஒரு கிலோ ரூ.400, கோவா 200 கிராம் ரூ. 115, சமையல் வெண்ணெய் 500 கிராம் ரூ.150, சாதாரண வெண்ணை ரூ.180, பன்னீர் 200 கிராம் ரூ.65, குலோப் ஜாமுன் 500 கிராம் ரூ.220, கைசூர்ப்பாக் 500 கிராம் ரூ.220, தயிர் ஒரு லிட்டர் ரூ. 60, ஐந்து வகையான ஐஸ்கிரீம்களில் நான்கு வகை ரூ. 20க்கும், சாக்கோபார் மட்டும் ரூ.17 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் அதிக விற்பனையாகும் வெவ்வேறு பொருட்களின் விலை 15 சதவீதம் உயர்ந்துள்ளது. மில்க் ஷேக் ரூ.20 விலையிலேயே உள்ளது.
தமிழக அரசு, ஆவின் நிர்வாகம் சார்பில் பால் தவிர்த்து 17க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.