

கடந்த ஜூன் மாதம் வரை நில உடமையாளர், குத்தகைதாரர் இடை யிலான வழக்குகளை கையாளும் வருவாய் நீதிமன்றங்களில் 7 ஆயிரத்து 52 வழக்குகள் நிலுவை யில் உள்ளதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
நில உடமையாளருக்கும் குத்தகைதாரர்களுக்கும் இடையில் ஏற்படும் வழக்குகளை வருவாய் நீதிமன்றங்கள் விசாரிக்கின்றன. குத்தகை சட்டங்கள் அடிப்படையி லான இந்த நீதிமன்றங்கள் தமிழ கத்தில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, மன்னார்குடி, திருச்சி, லால்குடி, நாகை, மதுரை, நெல்லை ஆகிய 10 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்கள் குத்தகை தொடர்பான 5 சட்டங்களை செயல் படுத்துகின்றன.
நிலுவை
தனித்துணை வட்டாட்சியர்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த வருவாய் நீதிமன்றங்களில் கடந்த 2011-ம் ஆண்டு மே 31-ம் தேதி வரை 9 ஆயிரத்து 806 வழக்குகள் நிலுவையில் இருந்தன.
தொடர்ந்து 2011-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 2016 ஜூன் 30-ம் தேதி வரை 30 ஆயிரத்து 670 வழக்குகள் வந்தன. இவற்றில் 33 ஆயிரத்து 424 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன, இந்தாண்டு ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி 7 ஆயிரத்து 52 வழக்கு கள் நிலுவையில் உள்ளன.
குத்தகை சட்டங்கள்
5 வகை குத்தகை சட்டங்களில் ஒன்று தமிழ்நாடு குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம். இச்சட்டத்தின் கீழ், நில உரிமையாளருக்கு குத் தகை தராமல் இருத்தல், நில உரிமையாளரின் உரிமையை மறுத்தல் உள்ளிட்ட காரணங்கள் தவிர, வேறு காரணங்களுக்காக குத்தகைதாரர் வெளியேற்றப்படு வதில் இருந்து இச்சட்டம் பாது காப்பு அளிக்கிறது. இச்சட்டத்தின் கீழ் தற்போது 526 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மொத்த விளைச்சலில் 25 சதவீதம் மட்டும் நில உரிமையாளருக்கு என்ற குத்தகை தொகையை நிர்ண யிக்கும் வகையிலான தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர் சட்டம் செயல்பாட்டில் உள்ளது. இச்சட்டத் தின் கீழ் 136 வழக்குகள் மட்டும் நிலுவையில் உள்ளன.
6,238 வழக்குகள்
அறக்கட்டளைகள் அதிகபட்ச மாக 20 ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் உள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு விட வேண்டும். இதில், அறக்கட்டளை, குத்தகைதாரர் இடையிலான தொடர்புகளை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு பொது அறக்கட்டளை சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இச்சட்டத்தின் கீழ் 2011 ஜூன் மாதம் 7 ஆயிரத்து 630 வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதன் பின் 5 ஆண்டுகளில் 27 ஆயிரத்து 118 வழக்குகள் வந்தன.
இவற்றில் 29 ஆயிரத்து 110 வழக்குகள் முடிக்கப்பட்டு, தற்போது 6 ஆயிரத்து 238 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பயிரிடும் குத்தகைதாரர்கள் தங்களை பதிவு செய்வதன் மூலம் தமிழ்நாடு வேளாண்மை நிலங்கள் சட்டம் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இச்சட்டத்தின் கீழ் வட்டாட்சியர் குத்தகை உரி மையை பதிவு செய்கிறார். இதுவரை 2 லட்சத்து 59 ஆயிரத்து 615 குத்தகைதாரர்கள் பதிவு செய்துள்ளனர். இச்சட்டத்தின் கீழ் 135 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.
குத்தகைதாரர் அல்லது உரிமை பெற்றவர், குடியிருப்பு அமைத்து 1990-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனுபவித்து வரும் விவசாயி, விவசாய தொழிலாளரை பாதுகாக்க தமிழ்நாடு குடியிருப்பு அனுபோக தாரர்கள் சட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இச்சட்டத்தின் கீழ் 17 வழக்குகள் மட்டுமே தற்போது நிலுவையில் உள்ளன. இத்தகவல்கள் வருவாய்த்துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.