

செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி அதிகாரிகள் சங்கமும் பங்கேற்கும் என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்ட மைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி.தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ் கூறிய தாவது:
பொதுத் துறை வங்கிகளை தனியார்மயம் செய்வதைக் கண் டித்தும், தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்வதைக் கண் டித்தும், நிதித்துறை, ரயில்வே, பாதுகாப்பு மற்றும் சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முத லீட்டை அதிக அளவில் அனுமதிப் பதை கண்டித்தும் வரும் செப்டம்பர் 2-ம் தேதி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
இப்போராட்டத்தில் வங்கி அதிகாரிகள் சங்கமும் பங்கேற்கும். பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், மண்டல கிராம வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த 3 லட்சம் அதிகாரிகள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இது தொடர்பாக, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்ட மைப்பின் பொதுச் செயலாளர் ஹர்வீந்தர் சிங், இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் தலைவரிடம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கி யுள்ளார். அதில், 2010 ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு வங்கி களில் பணியில் சேர்ந்த அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரி களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க வேண்டும். முத்தரப்பு பேச்சுவார்த்தையில் செய்யப்பட்ட உடன்பாட்டின்படி ஓய்வூதியத்தை உயர்த்துதல், குடும்ப ஓய்வூதியத்தை சீரமைத்தல் உள்ளிட்டவற்றை செயல்படுத்த வேண்டும். உயரும் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டுள்ளன.
இவ்வாறு தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ் கூறினார்.