Published : 08 Aug 2016 10:12 AM
Last Updated : 08 Aug 2016 10:12 AM

சவுதி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், டெக்னீஷியன், செவிலியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், டெக்னீஷியன், செவிலியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சவுதி அரேபிய சுகாதார அமைச் சகத்தின் கீழ் இயங்கும் அரசு இதய மருத்துவமனைகளுக்கு அனுபவம் வாய்ந்த கன்சல்டன்ட் மருத்துவர்கள், சிறப்பு மருத்து வர்கள், மயக்க மருத்துவர்கள், தீவிர கண்காணிப்பு பிரிவு மருத்து வர்கள், ரெசிடென்ட் மருத்துவப் பிரிவில் எம்பிபிஎஸ் - டிப்ளமோ, எம்பிபிஎஸ் - முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர்.

3 ஆண்டுகள் அனுபவம்

இதயப் பிரிவு லேப் டெக்னீ ஷியன்களான பர்பியூஷனிஸ்ட், கேத்லேப், கார்டியாக் எக்கோ, கார்டியாக் மயக்க மருத்துவம், ரெஸ்பிரேட்டரி தெரபிஸ்ட் ஆகியோர் தேவைப்படுகின்றனர். பி.எஸ்சி தேர்ச்சி, 3 ஆண்டு அனுபவத்துடன் 35 வயதுக்கு உட்பட்ட செவிலியர்களும் தேவைப்படுகின்றனர்.

இவர்களுக்கான நேர்காணல் வரும் 9, 10 தேதிகளில் டெல்லி யிலும், 12, 13 தேதிகளில் பெங்க ளூருவிலும் நடைபெறும்.

தேர்வு செய்யப்படும் கன்சல் டன்ட் மருத்துவர்களுக்கு ரூ.4.10 லட்சம் முதல் ரூ.5.42 லட்சம் வரை, சிறப்பு மருத்துவர்களுக்கு ரூ.2.46 லட்சம், ரெசிடென்ட் மருத்துவர்க ளுக்கு ரூ.1.13 லட்சம் முதல் ரூ.1.30 லட்சம் வரை மாத ஊதியத்துடன் குடும்ப விசாவும் கிடைக்கும்.

டெக்னீஷியன்களுக்கு ரூ.1.85 லட்சமும், செவிலியர்களுக்கு ரூ.72 ஆயிரம் வரையும் இலவச விமான பயணச்சீட்டு, இலவச இருப்பிடம் மற்றும் சட்டத்துக்கு உட்பட்டு இதர சலுகைகளும் வழங்கப்படும்.

இப்பணியிடங்களுக்கு தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண் ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் நகல், புகைப்படம் ஆகியவற்றை ovemclsn@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பவேண்டும். மேலும் விவரங்களை www.omcmanpower.com என்ற இணையதளம் அல்லது 044 - 2250 5886, 2250 2267, 2250 0417, 82206 34389 ஆகிய போன் எண்களை தொடர்புகொண்டு அறி யலாம்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x