ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்பும் திமுகவினர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்பும் திமுகவினர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி யில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். விண்ணப்பித்தவர்களிடம் 13-ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற வுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவோர் மார்ச் 10 (இன்று) முதல் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இதற் கான விண்ணப்பப் படிவத்தை பெற்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அளிக்கலாம்.

வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் வரும் 13-ம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் ரூ. 25 ஆயிரம். விண்ணப்பப் படிவங்களை ரூ. 1,000 செலுத்தி அண்ணா அறிவாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in