நாகரிகம் வளர்ந்தும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஓயவில்லை: ‘பெண் இன்று’ விழாவில் ‘பத்மபூஷண்’ மூஸா ரஸா ஆதங்கம்

நாகரிகம் வளர்ந்தும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஓயவில்லை: ‘பெண் இன்று’ விழாவில் ‘பத்மபூஷண்’ மூஸா ரஸா ஆதங்கம்
Updated on
2 min read

இன்றைய காலகட்டத்தில் பெண் களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில் பெண் கள் முன்னேற்றத்துக்கு ‘பெண் இன்று’ பல்வேறு பணிகளைச் செய்ய வேண்டும் என்று நீதிபதி பஷீர் அஹமது சயீது மகளிர் கல் லூரி தலைவர் ‘பத்மபூஷண்’ மூஸா ரஸா கேட்டுக் கொண்டார்.

‘தி இந்து’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பு ஞாயிறு தோறும் வெளியாகி வருகிறது. இந்த இணைப்பிதழ் நாளை முதல் புதிய ‘டேப்லாய்டு’ வடிவில் 16 பக்கங்களில் புதுப்பொலிவுடன் வெளிவரவுள்ளது. அதன் முதல் பிரதி சென்னை தேனாம்பேட்டை யில் உள்ள நீதிபதி பஷீர் அஹமது சயீது மகளிர் கல்லூரியில் நேற்று நடந்த விழாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. முதல் பிரதியை ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் வெளியிட அதனை கல்லூரித் தலைவர் மூஸா ரஸா பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, ரின் கரியர் ரெடி அகாடமி, ‘தி இந்து’ சார்பில் ‘ஆரோக்கியமான மாற்றம், அசத்தலான முன்னேற்றம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது.

வரதட்சணைக் கொடுமை

இதில், கல்லூரித் தலைவர் மூஸா ரஸா பேசும்போது, ‘‘நாகரி கம் வளர்ந்துவிட்ட இந்த கால கட்டத்தில்கூட வரதட்சணைக் கொடுமை உள்ளது. மேலும், பெண் கள் மீது பாலியல்ரீதியான வன்முறைகளும் நிகழ்த்தப்படு கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன. கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் இன்னமும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இந்து விதவைகள், 3 முறை தலாக் செய்யும் முறையால் இஸ்லாமிய பெண்கள் என அனைத்து தரப்பிலும் பெண்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு களை ‘பெண் இன்று’ அளிக்க வேண் டும்” என்று கேட்டுக்கொண்டார்.

‘வசந்த் அண்ட் கோ’ நிறுவனர் எச்.வசந்தகுமார் பேசும்போது, “பெண்களின் சாதனைகள் பற்றி இலக்கியத்திலும், வரலாற்றிலும் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து களைத் தெரிந்துகொண்டு பெண் கள் தங்களது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

கல்லூரி முதல்வர் ஷனாஸ் அஹமது பேசும்போது, “கல்வி, அறிவியல், பொருளாதாரம், மருத்து வம், அரசியல், பொழுதுபோக்கு, ஊடகம், சட்டம், விளையாட்டு, வியாபாரம், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு என எல்லாத் துறைகளிலும் பெண்ணுக்கான வெளி (space) தேவைப்படுகிறது” என்றார்.

மனவள மேம்பாட்டு ஆலோசகர் ஆர்.கார்த்திகேயன், எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி, கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் பர்வீன் சுல்தானா, மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி ஆகி யோர் இன்றைய பெண்களின் முன்னேற்றத்துக்கு தேவையான பல்வேறு அம்சங்கள் குறித்துப் பேசினர்.

விழாவின் நிறைவாக, ‘இந்துஸ் தான் யுனிலீவர் லிமிடெட்’ நிறு வனத்தின் விபுல் மாத்தூர், ‘ரின் கரியர் ரெடி அகாடமி’ உருவாக்கப் பட்டதன் நோக்கம் பற்றிப் பகிர்ந்து கொண்டார்:

“ஒவ்வொருவருக்கும் தனிப் பட்ட திறமைகள் உண்டு என்பதில் ‘ரின் பிராண்ட்’ ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு உரிய வாய்ப்பும் பயிற்சியும் அளிப்பதன் மூலம் அவர்களுக்கான சுய சார்பை ஏற்படுத்த முடியும் என்ற எண்ணத்திலேயே ‘ரின் கரியர் ரெடி அகாடமி’ செயல்படுகிறது. அண் மையில் ‘ஹன்ஸா ரிசர்ச் குரூப்’ புடன் சேர்ந்து ‘ரின்’ நடத்திய ஆய்வில், ஆந்திரா, தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 88 சதவீத தாய்மார்கள் தங் கள் குழந்தைகளுக்கு ஒளிமய மான தொழில்வாழ்வை ஏற்படுத் தித் தருவதற்கான வழிவகை தெரியாமல் தவிப்பது கண்டறியப் பட்டது.

இந்தத் தேவையை முடிந்த வரை நிறைவேற்றுவதே ‘ரின் கரியர் ரெடி அகாடமி’யின் நோக்கம்” என்று அவர் குறிப்பிட்டார். ‘தி இந்து’ இணைப்பிதழ்களின் ஆசிரி யர் அரவிந்தன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in