

‘தி இந்து' பிராபர்டி பிளஸ் லிவிங் ஸ்பேஸஸ் 2016 என்ற பெயரில் சென்னையின் மிகப் பிரம்மாண்டமான வீட்டு வசதி கண்காட்சி ஜூலை 9, 10 தேதிகளில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கண்காட்சியை காணலாம்.
‘தி இந்து' பிராபர்டி பிளஸ் லிவிங் ஸ்பேஸஸ் 2016 கண்காட்சி கிரெடாய் அமைப்பின் ஒத்துழைப்புடன் நடைபெற உள்ளது. 80-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற தரமான கட்டுமான நிறுவனங்கள் இதில் பங்கேற்க உள்ளன. பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகும் குறைந்த விலை வீடுகள், அடுக்குமாடி வீடுகள், பகட்டான வில்லாக்கள், ஆடம்பர பங்களாக்கள் உட்பட அனைத்து பிரிவினருக்கும் ஏற்ற குடியிருப்புகளை இங்கு வாங்க முடியும்.
இது மட்டுமின்றி நிதி உதவியை பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்படும். வீடுகளை வாங்க வருபவர்கள் நிதி நிறுவனங்கள், வங்கிகளின் பிரதிநிதிகளை நேரடியாக சந்தித்து எந்தவித குறுக்கீடும் இல்லாமல் நிதி உதவியை பெற முடியும். தனிப்பட்ட தேவைகள் இருப்பின் நிபுணர்களை சந்தித்து ஆலோசனைகளை பெறலாம்.
குறைந்த விலையில் மிகச்சிறந்த குடியிருப்புகளை வாங்க இங்கு உள்ள ஸ்டாலுக்கு தனிப்பட்ட முறையில் வருகை தர முன்பதிவு செய்துகொள்ளலாம்.
‘தி இந்து' பிராபர்டி பிளஸ், சொந்த வீடு ஆகியவை கிரெடாய் அமைப்பு மற்றும் ரூப் அன் ஃப்ளோர் இணையதளத்துடன் இணைந்து இக்கண்காட்சியை நடத்துகின்றன. இக்கண்காட்சியை நடத்த பரோடா வங்கியும் ஒத்துழைப்பு வழங்குகிறது.