

பாஸ்போர்ட் எடுக்க கூடுதல் ஆவணங்கள் கேட்பதாக வாசகர் ஒருவர் உங்கள் குரலில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சாலிகிரா மத்தைச் சேர்ந்த சுப்பு என்ப வர் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் கூறும்போது, ‘சென்னை மண்டல பாஸ் போர்ட் அதிகாரி பாஸ்போர்ட் எடுக்க வாக் காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் அபிடவிட் ஆகியவை மட்டும் போதும் என தெரிவித்துள்ளார். ஆனால் சாலிகிராமம் பாஸ்போர்ட் அலுவல கத்தில் கூடுதல் ஆவணங்கள் கேட்கிறார் கள். மேலும், அந்த அலுவலகத்தின் எதிர் புறம் உள்ள பொன்னியம்மன் கோயில் அருகேயுள்ள இ-சேவை மையத்துக்கு சென்றால் அவர்களோ தரகர்களிடம் செல்லுமாறு கூறுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு மிகவும் சிரம மாக உள்ளது. எனவே இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
இதுகுறித்து, மண்டல பாஸ் போர்ட் அலு வலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘பாஸ்போர்ட் எடுப்பதற்கான விதிமுறைகள் தற்போது எளிதாக்கப்பட்டுள்ளன. இது குறித்து கடந்த வாரம் அனைத்து நாளிதழ் களிலும் செய்தி வெளியாகியுள்ளது. எனவே முன்பு போல பாஸ்போர்ட் எடுக்க பல ஆவ ணங்கள் தேவையில்லை’ என்றார்.