Published : 08 Nov 2014 10:19 AM
Last Updated : 08 Nov 2014 10:19 AM

சபரிமலைக்கு கூடுதல் ரயில்கள்: முன்பதிவு இன்று தொடக்கம்

கூட்ட நெரிசலை குறைக்க சபரி மலைக்கு கூடுதல் ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன் பதிவு நவம்பர் 8-ம் தேதி முதல் தொடங்குகிறது.

பிரீமியம் அதிவிரைவு ரயில்கள்

கொச்சுவேலி சென்னை சென்ட்ரல் இடையே அறிவிக்கப்பட்டுள்ள பிரீ மியம் அதி விரைவு ரயில் (எண்.00652) கொச்சுவேலியிலிருந்து நவம்பர் 17, 21,23, 30 ஆகிய தேதிகளில் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை மறுநாள் காலை 11.40-க்கு வந்தடையும். அதே போன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நவம்பர் 16, 22, 23, 24, 30 ஆகிய தேதிகளில் மாலை 4.30 மணிக்கு புறப்படும் பிரீமியம் அதி விரைவு ரயில் (எண்.00651) மறு நாள் காலை 6.20 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

இந்த ரயில்கள் கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், காட்பாடி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். நவம்பர் 16, 17, 21, 22, 23 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் பிரீமியம் அதி விரைவு ரயில்களுக்கு முன் பதிவு நவம்பர் 8-ம் தேதி தொடங்குகிறது. மற்ற ரயில்களுக்கு அவை இயக்கப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு முன்பதிவு தொடங்கும்.

அதே போன்று, கொச்சுவேலி சென்னை சென்ட்ரல் இடையே நவம்பர் 15, 22, 29 ஆகிய தேதிகளில் இரவு 10.15 மணிக்கு கொச்சுவேலியிலிருந்து கிளம்பும் பிரீமியம் அதிவிரை ரயில் (எண்.00654) மறு நாள் மதியம் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இது கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், காட்பாடி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நவம்பர் 18-ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரயில் (எண்.00653) மறு நாள் 12.45 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இது பாலக்காடு, எர்ணாகுளம் டவுன், கோட் டயம், செங்கனூர், கொல்லம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். நவம்பர்15, 18, 22 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் பிரீமியம் அதிவிரைவு ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 8-ம் தேதி தொடங்கும். மற்ற பிரீமியம் ரயில்களுக்கு அவை இயக்கப்படும் 15 நாட்களுக்கு முன்பு முன்பதிவு தொடங்கும்.

அதிவிரைவு ரயில்கள்

எர்ணாகுளம் சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயில் (எண்.06346) நவம்பர் 20, 27 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்திலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். அதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நவம்பர் 21, 28 ஆகிய தேதிகளில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரயில் (எண்.06345) மறுநாள் காலை 10.50 மணிக்கு எர்ணாகுளத்தை வந்தடையும்.

இந்த ரயில்கள் அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். ரயில் எண்.06346 பெரம்பூர் ரயில் நிலையத்திலும் நிற்கும். இந்த ரயில்களுக்கான முன் பதிவு நவம்பர் 8-ம் தேதி தொடங்கும்.

மேலும் திருவனந்தபுரத்திலிருந்து நவம்பர் 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 8.20 மணிக்கு புறப்படும் ரயில் (எண்.06348) மறு நாள் மதியம் 12.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நவம்பர் 20, 27 ஆகிய தேதிகளில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் (எண்.06347) மறு நாள் காலை 11 மணிக்கு திருவனந்தபுரம் சென்ற

டையும். இந்த ரயில்கள் கொல்லம், காயங்குளம், செங்கனூர், திருவலா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன் பதிவு நவம்பர் 8-ம் தேதி தொடங்கும்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து டிசம்பர் 1-ம் தேதி மாலை 3.15 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (எண்.06349) மறுநாள் காலை 6.30 மணிக்கு கொச்சுவேலி வந்தடையும். இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார் பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், திருவலா, செங்கனூர், காயங்குளம், கொல்லம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 8-ம் தேதி தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x