

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அன்வர் ராஜாவை ஆதரித்து நடிகர் ராமராஜன் சாயல்குடி, ஏர்வாடி, காவாகுளம், பூப்பாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார். சாயல்குடியில் நடிகர் ராமராஜன் பேசியதாவது:
ஏழை தொழிலாளிகள் வயிறார சாப்பிட வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் ஒரு ரூபாய்க்கு இட்லியை வழங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. ஏழைகளின் பொருளாதாரம் பெருக விவசாயிகளுக்கு ஆடு, மாடுகள் வழங்கியுள்ளார்.
இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக அப்துல் கலாம் வரவேண்டும் என்பதற்காக முதலில் ஆதரவு தெரிவித்தவர் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், அதைக் கெடுத்தவர் கருணாநிதி என்றார் ராமராஜன். அப்போது முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் காளிமுத்து, சாயல்குடி ஒன்றியச் செயலாளர் அந்தோனிராஜ், நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.