போயஸ் வீடு எங்களுக்கே; டிடிவி தினகரன் தலைமையை ஒருபோதும் ஏற்கமாட்டேன்: ஜெ. அண்ணன் மகன் தீபக் திடீர் போர்க்கொடி

போயஸ் வீடு எங்களுக்கே; டிடிவி தினகரன் தலைமையை ஒருபோதும் ஏற்கமாட்டேன்: ஜெ. அண்ணன் மகன் தீபக் திடீர் போர்க்கொடி
Updated on
2 min read

அத்தை மரணம் குறித்து விசாரணை வேண்டும்

*

அதிமுக துணைப் பொதுச் செய லாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் தலைமையை ஏற்கமாட்டேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் திடீரென கூறியிருப்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வின் அண்ணன் ஜெயகுமாரின் மகன் தீபக், மகள் தீபா. மருத்துவ மனையில் ஜெயலலிதா அனுமதிக்கப் பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க தீபா பலமுறை வந்தார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதே நேரம், சசிகலா வட்டாரத்தில் நெருக்க மாக இருந்த தீபக், ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கிலும் சசிகலாவுடன் பங்கேற்றார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட பிறகும்கூட, தீபக் சென்று அவரை சந்தித்து வந்தார்.

இதற்கிடையில், சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு தன் உறவினர் டிடிவி தினகரனை அதிமுக துணை பொதுச் செயலாளராக நியமித்தார். அதிமுக தலைமை அலுவலகத்தில் டிடிவி தினகரன் நேற்று பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், தினகரனின் தலை மையை ஏற்க முடியாது என தீபக் நேற்று மாலை கூறியிருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு தீபக் அளித்த பேட்டியில் கூறியதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக் கிறதா?

அதுகுறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன்.

டிடிவி தினகரனை ஏற்க மறுக்க என்ன காரணம்?

டிடிவி தினகரன், சசிகலாவின் குடும்பத்தை சேர்ந்தவர். அவர் என் குடும்பம் அல்ல. அவர் ஜெயலலிதாவின் குடும்பமும் கிடையாது. தலைமைக்கு வரும் தகுதி, பன்னீர்செல்வத்துக்கு இருக்கிறது. தினகரனுக்கு அந்த தகுதி இல்லை.

ஜெயலலிதா இருந்தபோதே தினகரன் பொருளாளராக நியமிக்கப்பட்டிருந்தாரே?

அது அத்தை (ஜெயலலிதா) நியமித்தது. பன்னீர்செல்வம் 3 முறை முதல்வராக இருந்துள்ளார். பன்னீர்செல்வமோ, எடப்பாடியோ முதல்வராக இருப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. பன்னீர்செல்வம் எல்லாத்தையும் விட்டுக்கொடுப்பார். எடப்பாடி இருந்துவிட்டுப் போகட்டும் என்றுதான் அவர் நினைப்பார். நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். 2 அதிமுக வேட்பாளர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் நிற்க மாட்டார்கள். ஒரு அதிமுக வேட் பாளர்தான் நிற்பார். தற்போது அதிமுக வில் நடப்பது அண்ணன் - தம்பி சண்டை மாதிரி.

அதிமுக சார்பில் நீங்கள் போட்டி யிடுவீர்களா?

இது பெரிய காமெடியாக உள்ளது.

டிடிவி தினகரனை நியமித்து ஒரு வாரம் ஆகியுள்ளதே?

அடிப்படை தொண்டர்கள் யாருமே அவரை ஏற்கமாட்டார்கள். நானும் ஏற்கமாட்டேன்.

திடீரென ஏதிர்க்க என்ன காரணம்?

நான் அடிப்படை தொண்டன். கட்சியில் உள்ளேன். தீபாவை ஏற் கும் அளவுகூட தினகரனை ஏற்க மாட்டார்கள்.

ஜெயலலிதா இறுதி அஞ்சலியின்போது சசிகலாவுடன் இருந்தீர்கள். இப்போது தினகரனை எதிர்க்கிறீர்களே?

சசிகலாவுடன்தானே இருந்தேன். தினகரனுக்கும் சசிகலாவுக்கும் என்ன சம்பந்தம்?

கட்சித்தொண்டர்கள் தினகரனை ஏற்கமாட்டார்களா?

கண்டிப்பாக. பன்னீர்செல்வம் வந் தால் ஏற்பார்கள். எல்லாரும் திரும்ப அதிமுகவுக்கு வரத்தான் போகிறார்கள். ஏற்கெனவே கூறியதுபோல, இது குடும்ப சண்டை மாதிரி. அதிமுக என்பது ஒரு குடும்பம்.

பன்னீர்செல்வம் செய்ததை ஆதரிக் கிறீர்களா?

கட்சியில் தவறு நடந்திருந்தாலும், பன்னீர்செல்வம் சென்றிருக்கக் கூடாது. அதிமுக 3 பிரிவாக உள்ளது. அது ஒன்றாக இணையும். சண்டை போட்டாலும் தைரியமாக சண்டை போடுகிறோம். அம்மா இல்லாத வீட்டில் சண்டை வருவதில்லையா?

ஜெயலலிதா கட்டவேண்டிய 100 கோடியை நீங்கள் கட்டுகிறீர்களா?

அத்தை கட்டவேண்டியதை கண்டிப் பாக கட்டுவேன்.

பன்னீர்செல்வம் வந்தால்கூட கட் சியை முன்னின்று நடத்தட்டும் என்கிறீர்களா?

பன்னீர்செல்வம் 3 முறை முதல்வராக இருந்தவர். இதைவிட அவருக்கு வேறு என்ன தகுதி வேண்டும்! ஜெயலலிதாவால் ஏற்கப்பட்ட அவரை நான் மட்டுமல்ல, தொண்டர்களும் விரும்புகின்றனர்.

நீங்கள் கூறியதில் உறுதியாக உள்ளீர்களா?

சசிகலா அத்தை, என் அம்மாவுக்கு சமம். அவரை விட்டு செல்லமாட்டேன். அதற்காக, அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஆதிக்கம் செலுத்தினால் ஆதரிக்க மாட்டேன். அதிமுக உடைவதையும் அனுமதிக்க முடியாது. இந்த கருத்தில் மாற்றம் இல்லை. சசிகலாவை மக்கள் ஏற்காவிட்டாலும் சசிகலாவுக்கு என் ஒரு ஓட்டு உண்டு.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந் துள்ளதே.

அது அத்தை வீடு. அது எனக்கும் தீபாவுக்கும்தான் சொந்தம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வைகைச் செல்வன் கருத்து

இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறும்போது, ‘‘தலைமைக்கு எதிராக தீபக் கூறியிருப்பது வியப்பாக உள்ளது. கருத்துவேறுபாடு இருந்தால் பேசி தீர்த்துக்கொள்ளப்படும். தீபக்கை யாரோ பின்னால் இருந்து இயக்கு கின்றனர்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in