

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாலை விரிவாக்கத்துக் காக மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மனிதச் சங்கிலி மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் சமூக ஆர் வலர்கள் ஈடுபட்டனர். இதில் வெளி நாட்டு பக்தர்களும் கலந்துகொண் டனர்.
‘அவசர கால பாதைத் திட்டம்’ என்ற பெயரில் ரூ.65 கோடி மதிப் பில் திருவண்ணாமலை கிரிவலப் பாதை விரிவாக்கம் செய்யப்படு கிறது. அதற்காக, கிரிவலப் பாதை யில் உள்ள 300-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.
கிரிவலப் பாதையில் மரங்கள் அழிக்கப்பட்டால், கிரிவலப் பாதை யில் இயற்கை அழியும் என பக்தர் களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிரிவலப் பாதை யில் மரங்கள் வெட்டுவதைக் கண் டித்து சாதுக்கள், வெளிநாட்டு பக்தர் கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பு களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கிரிவலப் பாதையில் உள்ள நிருதிலிங்கம் அருகே மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மரம் வெட்டும் பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டனர்.
ஆனாலும், அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்ப்பையும் மீறி, மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டன. இதனால், ஆத்திரமடைந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவண்ணாமலை காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ‘‘உங்கள் கோரிக்கைகளை ஆட்சியரிடம் தெரி வியுங்கள். அதுவரை மரங்கள் வெட்டப்படாது’’ என்றனர். அதன் பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று ஆட்சி யர் அ.ஞானசேகரனை சந்தித்து முறையிட்டனர். அப்போது, மரங் களை அகற்றாமல் சாலையை எவ்வாறு விரிவாக்கம் செய்வது என ஆட்சியர் கேள்வி எழுப்பி னார். அதற்கு பதிலளித்த சமூக ஆர்வலர்கள், மரங்களை அழிக் காமல் சாலையை விரிவாக்கம் செய்வற்கான வழிகளை தெரிவித் தனர்.
இதைத் தொடர்ந்து, ஆட்சியர் அ.ஞானசேகரன் கூறும்போது, “மரங்களை வெட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்துள்ளார்.
அனுமதி கூடாது
இது குறித்து சமூக ஆர்வலர் கள் கூறும்போது, “கிரிவலப் பாதையில் உள்ள அரிய வகை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது. மரங்கள் அழிக்கப்பட்டால், பக்தர்கள் வருகை குறையும். அவசர கால பாதை எனக் கூறி மரங்களை அழித்து பக்தர்களின் வருகையை வெகுவாக குறைப்பதே திட்டத்தின் நோக்கமாகும். அதனை அனுமதிக் கக்கூடாது. மரங்கள் காப்பாற்றப்பட வேண்டும்” என்றனர்.