

2011 சட்டமன்றத் தேர்தலில் டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர்
வென்றவர்: பி. வெற்றிவேல் (அதிமுக)
பெற்ற வாக்குகள்: 83777
வெற்றி வாய்ப்பை இழந்தவர்: பி.கே. சேகர்பாபு (திமுக)
பெற்ற வாக்குகள்: 52522
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் திமுகவின் சேகர்பாபுவை வென்றவர் அதிமுகவின் பி. வெற்றி வேல். நடுத்தர வகுப்பு மக்கள், உடலுழைப்புத் தொழிலாளர்கள், குடிசை வாழ் மக்கள் என பலதரப்பட்டவர்களும் பரவலாக நிறைந்து இருக்கும் தொகுதி இது.
சமீபத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெய் குழாய்கள் பழுதடைந்து குடிநீரில் எண்ணெய் கலந்ததாக சர்ச்சை எழுந்தது. மக்களின் அதிருப்தி சாலை மறியலாய் வெளிப்பட்டது. குடிநீர் விநியோகத்தை பொருத்தவரை ராதாகிருஷ்ணன் நகரில் 69 சதவித மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சாலை வசதிகளும் சீராக இல்லை என பலர் கூறியுள்ளனர். சட்டம் ஒழுங்கு ஒரளவுக்கு பரவாயில்லை என்றாலும் தண்டையார்பேட்டை , கொருக்குப் பேட்டை பகுதிகளில் நடந்த தொடர் கொலைகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தவிர்த்து, வேலைவாய்ப்பு, அரசு அதிகாரிகளின் செயல்பாடு, கழிவு நீர் மற்றும் குப்பை மேலாண்மை உள்ளிட்ட பல கூறுகளில் பெரும்பான்மையான மக்கள் தங்கள் திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.