

நம்பிக்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசியது அவமானத்துக்குரியது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக வைகோ மீது ஆயிரம் விளக்கு போலீஸார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக சென்னை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கோகிலா முன்பு வைகோ நேற்று ஆஜரானார்.
அப்போது நீதிபதி, ‘‘இந்த வழக்கில் வைகோ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டியுள்ளது’’ எனக் கூறி விசா ரணையை ஜூன் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மறுஉத்தரவு பிறப் பிக்கும் வரை வைகோ நீதிமன்றத் தில் ஆஜராகத் தேவையில்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த வைகோ, அங்கிருந்த நிருபர் களிடம் கூறியதாவது:
தமிழகம் பஞ்சப் பிரதேசமாக மாறி வருகிறது. விவசாயிகளின் தற் கொலை அதிகரித்துவிட்டது. ஆந் திரா, கேரளா மாநிலங்கள் தடுப் பணைகள் கட்டி வருவது தமிழகத் துக்கு மேலும் ஆபத்தை விளை விக்கும்.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் தமிழகத்தை நாசப்படுத்தி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும்.
முதல்வர் பழனிசாமி தலைமை யிலான அரசு கொண்டு வந்த நம் பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுக எம்எல்ஏக்களி டம் பேரம் பேசியது அவமானத்துக் குரியது. அதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிரூபண மானால் அது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.