Published : 13 Nov 2014 09:57 am

Updated : 13 Nov 2014 09:57 am

 

Published : 13 Nov 2014 09:57 AM
Last Updated : 13 Nov 2014 09:57 AM

சபரிமலைக்கு கூடுதலாக சிறப்பு ரயில்

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரயில் எண்: 02675 பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் வரையில் பிரீமியம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் வரும் 21 மற்றும் 28-ம் தேதி இயக்கப்படவுள்ளது. பெங்களூரிலிருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். அதேபோல், திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் வரையில் செல்லும் பிரீமியம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (ரயில் எண்: 02658) வரும் 23 மற்றும் 30-ம் தேதிகளில் திருவனந்தபுரத்தில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.10 மணிக்கு பெங்களூரை சென்றடையும். 23-ம் தேதி இயக்கப்படவுள்ள சிறப்பு ரயிலுக்கு வரும் 13-ம் தேதியும், 30-ம் தேதி இயக்கப்படவுள்ள சிறப்பு ரயிலுக்கு வரும் 15-ம் தேதியும் முன்பதிவு தொடங்கும்.

சபரிமலைபக்தர்களின் வசதிக்காக கூடுதல் ரயில்சிறப்பு ரயில்கள்

You May Like

More From This Category

More From this Author