

சசிகலா தலைமையை ஏற்றுப் பெரும்பாலான எம்எல்ஏக்கள் கூவத்தூரிலேயே காத்திருக்கின்றனர். ஆளுநரோ, எத்தனை பேர் எத்தனை முறை சென்று பார்த்தாலும் எந்த முடிவும் அறிவிக்காமல் இருக்கிறார்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதில் இன்னும் தெளிவு ஏற்படாத நிலையில் ஆளுநரை இன்று மீண்டும் சந்திக்கவிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆளுநர் அழைப்பு விடுத்ததன் பேரில் கூவத்தூர் விடுதியிலிருந்து கிளம்பியுள்ளார்.
சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், வீட்டு வசதித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ. தனியரசு ஆகியோர் கூவத்தூர் விடுதியில் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.