

திருவண்ணாமலையில் உள்ள பவழக்குன்று மலையில் அத்துமீ றிச் சென்று பூஜை செய்த நித்யானந்தாவின் 7 சீடர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலையில் உள்ள பவழக்குன்று மலையில் அத்து மீறிச் சென்று குடிசை அமைத்து நித்யானந்தா சீடர்கள் பூஜை செய்தனர். அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோட் டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமையிலான குழுவினர் காவல்துறை பாதுகாப்புடன் கடந்த 16-ம் தேதி குடிசையை அகற்றி சீடர்களை வெளியேற்றினர். அதன் பிறகும், நித்யானந்தா சீடர்களின் அத்துமீறல் தொடர்கிறது.
பவழக்குன்று மலையில் நேற்று காலை பூஜை செய்த நித்யானந்தாவின் சீடர்கள் 7 பேரை போலீஸார் பிடித்துச் சென்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பினர்.