Published : 24 Dec 2013 11:30 AM
Last Updated : 24 Dec 2013 11:30 AM

சென்னை அரசு பொது மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு இனி அடையாள அட்டை

சென்னை அரசு பொது மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுகிறது.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 3 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர் களை பார்க்க உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் மருத்துவமனைக்குள் வருகின்றனர்.

சில சமயங்களில் நோயாளிகள் இறக்கும் சூழ்நிலைகளில் டாக்டர்கள் மீது உறவினர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நடந்தன.

இதையடுத்து, மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நோயாளியுடன் ஒருவர் மட்டும் தங்குவதற்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதன்படி, அடையாள அட்டை வைத்திருப்பவர் மட்டுமே நோயாளியை சென்று பார்த்து வந்தார். மூன்று மாதங்களுக்கு பிறகு பாதுகாப்புகள் தளர்த்தப்பட்டன. நோயாளியை பார்க்க யார் வேண்டுமானாலும் செல்லும் நிலை மீண்டும் உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் 43 செக்யூரிட்டிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், நோயாளிகளை பார்க்க வருபவர்களுக்கும், செக்யூரிட்டிகளுக்கும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

இதனை தவிர்ப்பதற்காக, தமிழ்நாடு சுகாதார திட்டங்கள் துறையின் சார்பில் மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்களுக்கு அடை யாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x