

விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பாக மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும் என பாஜக தேசியச் செயலாளர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதா வது: நீதிமன்றம் அறிவித்த பிறகும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவது நல்லதல்ல. உள்ளாட்சித் தேர் தலை விரைந்து நடத்த வேண் டும். விவசாயிகளின் கடன் தள்ளு படி தொடர்பாக மாநில அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும் என மத்திய நிதித் துறை அமைச்சரே தெரிவித்துவிட்டார். எனவே, இதில் தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.
விக்கிரவாண்டியிலிருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூருக்கு இருவழிச்சாலை அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பணிகள் தொடங்கப்பட உள்ளன என்றார்.