Published : 26 May 2017 09:49 AM
Last Updated : 26 May 2017 09:49 AM

திமுக மாவட்ட செயலாளர் தூத்துக்குடி என்.பெரியசாமி காலமானார்: ஸ்டாலின், வைகோ அஞ்சலி; திமுக 3 நாள் துக்கம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி (78) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று கால மானார். அவரது உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

திமுக தலைவர் கருணாநிதி யால் ‘முரட்டு பக்தன்’ என அழைக் கப்பட்டவர் என்.பெரியசாமி. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்து வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி, நேற்று காலை 7 மணி அளவில் காலமானார்.

மறைந்த பெரியசாமிக்கு எபநேசரம்மாள் என்ற மனைவியும், கீதா ஜீவன், சுதா, மிஸிதா என்ற 3 மகள்களும், ஜெகன், ராஜா, அசோக் என்ற 3 மகன்களும் உள்ளனர். கீதா ஜீவன், தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். திமுக ஆட்சியில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். என்.பி.ஜெகன், திமுக பொதுக்குழு உறுப்பினராக உள்ளார்.

மருத்துவமனையில் வைக்கப் பட்டிருந்த பெரியசாமி உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டா லின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் அமைச்சர்கள் க.பொன்முடி, தா.மோ.அன்பரசன், பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின் அவரது உடல் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பெரியசாமியின் உடல் பொது மக்கள், கட்சித் தொண்டர்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் இன்று வைக்கப்படுகிறது. இறுதிச் சடங்குகள் நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு நடக் கிறது. இதில் மு.க.ஸ்டாலின் உள் ளிட்ட திமுக முன்னணி தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

கருணாநிதியின் முரட்டு பக்தர்

பெரியசாமியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள தட்டார்மடம் ஆகும். 14-வது வயதில் தூத்துக்குடிக்கு வந்து, அங்குள்ள ரைஸ்மில் ஒன்றில் பணியாற்றினார். கருணாநிதி மீது கொண்ட தீவிர பற்றால் திமுகவில் இணைந்தார். 1976-ல் அவசர நிலை காலத்தில் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஆற்காடு வீராசாமி, வைகோ ஆகியோருடன் பாளையங்கோட்டை சிறையில் ஓராண்டு அடைக்கப்பட்டிருந்தார்.

அதன் பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்ட பெரியசாமி, திருநெல் வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் உருவான தில் இருந்து 30 ஆண்டுகளாக அந்த மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வந்தார். தூத்துக்குடி நகர்மன்றத் தலைவராகவும், 2 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

மதுரா கோட்ஸ் தொழிற்சங்கம் உட்பட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் தலைவர் மற்றும் செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார். பெரியசாமியை தனது முரட்டு பக்தன் என கருணாநிதி அன்போடு அழைப்பார். தூத்துக்குடி மாவட்ட திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக பெரியசாமி விளங்கினார்.

ஸ்டாலின் இரங்கல்

ஸ்டாலின் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்ப தாவது:

‘எனது முரட்டு பக்தன்’ என திமுக தலைவர் கருணாநிதியால் அழைக்கப்பட்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பெருமைமிக்க தொண்டரை இழந்த சோகம் எங்களை உலுக்கிக் கொண் டிருக்கிறது. 36 தொழிற்சங்கங்களின் தலை வராக இருந்து தொழிலாளர் உரிமைகளுக்காக போராடியவர். 30 ஆண்டுகள் மாவட்டச் செயலா ளராக இருந்த அவருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. பெரியசாமி மறைந்தாலும் அவரிடம் உள்ள கட்சி உணர்வு தலைமுறை தலைமுறை யாக நம்மிடம் தங்கிநிற்கும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் பெரியசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

3 நாள் துக்கம்

‘என்.பெரியசாமி மறைவை யொட்டி இன்று (26-ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப் படும். கட்சி நிகழ்ச்சிகள் அனைத் தும் ஒத்திவைக்கப்படும்’ என திமுக தலைமை அறிவித்துள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x