குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகள் வருவதை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் அறிவிப்பு

குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகள் வருவதை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் அறிவிப்பு
Updated on
1 min read

சட்டப்பேரவையில் நேற்று வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:

பல்வேறு மரம் நடும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட தால், தமிழகத்தில் பசுமைப் போர்வை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாது காப்பு மற்றும் பசுமையாக்கு தல் திட்டத்தில் இந்த ஆண்டு 68 லட்சம் மரக்கன்றுகள் நட ரூ.61.68 கோடி ஒதுக்கப் பட்டு பணிகள் தொடங்கப்படுகி றது. தனியார் நிலங்களில் மரம் நடுதல் திட்டத்தில் 1.02 கோடி மரக்கன்றுகள் 20,400 ஹெக்டேர் பரப்பில் நடப்படுகிறது படுகை நிலங்களில் தேக்கு மரங்கள் உற்பத்தி செய்யும் திட்டம், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.52.64 கோடியில், தஞ்சை, திருவாரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

திமுக ஆட்சியில் 163 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2014-ல் 229 ஆக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் புலிகளின் எண் ணிக்கை சராசரியாக 30 சதவீதமே உயர்ந்துள்ள நிலை யில், தமிழகத்தில் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் வழி காட்டுதல்படி, அடர்ந்த வனத் துக்குள் கண்காணிப்பு கேமராக் கள், கூகுள் வரைபடம், ஜிபிஆர் எஸ் தொழில்நுட்பம் மூலம் புலிகள், சிறுத்தைகள் மற்றும் இதர உயிரினங்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு, குடியிருப் புக்குள் வராத வண்ணம் பாது காப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும்.

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த வனப் பணியாளர்கள் நினைவாக ஆண்டுதோறும் செப் டம்பர் 11-ம் தேதி வனத்துறையின் தியாகிகள் தினமாக அனு சரிக்கப்படும். நீலகிரி, கோவை, மதுரை, திண்டுக்கல், நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்ட வனப் பகுதிகளில் சிறப்பு பகுதி மேம் பாட்டுத் திட்டம் ரூ.16.91 கோடியில் செயல்படுத்தப்படும்.

வண்டலூர் உயிரியல் பூங்கா வுக்கு, இணையதளம் மூலம் நுழைவுச்சீட்டு, சுற்றிப்பார்க்கும் வாகன அனுமதி சீட்டு வழங்கப் படும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு பனை மரங்கள் பாதுகாப்பு மற்றும் நடவுத்திட்டம் ரூ.1.60 கோடியில் செயல்படுத்தப்படும். வனங்களில் வேட்டையை தடுக்கவும், வன உயிரின நடமாட்டத்தை அறி யவும் ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும். பருவநிலை மாறுபாடுகள் மற்றும் தொடர் புடைய அச்சுறுத்தல்களில் இருந்து வனச்சூழல் அமைப்பை அறிய தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in