Published : 28 Feb 2017 08:55 AM
Last Updated : 28 Feb 2017 08:55 AM

சசிகலா பதிலளிக்க அளித்த கெடு இன்று முடிகிறது: அதிமுகவை கைப்பற்றப் போவது யார்?- தேர்தல் ஆணைய முடிவுக்காக காத்திருக்கும் ஓபிஎஸ் அணி

அதிமுகவை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம், சசிகலா தரப்பு கடுமை யாக முயற்சித்து வருகிறது. இந் நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்நோக்கி ஓபிஎஸ் அணி காத்திருக்கிறது.

அதிமுகவில் சசிகலா தலை மையை எதிர்த்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு மைத் ரேயன் உள்ளிட்ட 12 எம்.பி.க்கள், 11 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித் துள்ளனர். கட்சியின் சட்ட விதிப்படி பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூறி வருகிறது.

கடந்த 16-ம் தேதி மைத்ரேயன் தலைமையில் டெல்லி சென்ற அதிருப்தி எம்பிக்கள் குழு, தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தது. அதில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன்மீது உடனடியாக நட வடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம், மறுநாளே பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. பிப்ரவரி 28-ம் தேதிக்குள் (இன்று) பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸில் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, தேர்தல் ஆணை யத்துக்கு சட்டரீதியாக பதிலளிக்க சசிகலா தரப்பு முயற்சி எடுத்துள் ளது. இதற்காக தயாரிக்கப்பட் டுள்ள பதில் மனுவில் சசிகலாவிடம் கையொப்பம் பெற்று தேர்தல் ஆணையத்திடம் இன்று அளிக்க டி.டி.வி.தினகரன் நட வடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.

இந்த விவகாரத்தில், சசிகலா வுக்கு எதிரான முடிவை தேர்தல் ஆணையம் வெளியிட்டால், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர் களை நீக்கியதும், டிடிவி தினகரன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோரது நியமனமும் ரத்தாகிவிடும். எனவே, தேர்தல் ஆணையத்தின் முடிவை ஓபிஎஸ் அணி எதிர்பார்த்து காத்திருக்கிறது.

ஆதரவு திரட்ட முயற்சி

இதற்கிடையே, மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். தொடர்ந்து நேற்றும் சேலம் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். இதையடுத்து அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மாவட்டச் செயலாளர்களை சந்திக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால், அவர் யாரையும் நேற்று சந்திக்கவில்லை.

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க ஓபிஎஸ் முடிவெடுத்துள்ளார். பல மாவட்டங்களில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை ஒருங் கிணைக்கும் முயற்சியிலும் ஓபிஎஸ் தரப்பு ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில் நிர்வாகிகளை தங்கள் பிடியில் வைத்திருக்க டி.டி.வி.தினகரன் தரப்பில் அமைச்சர்கள், மாவட்டச் செய லாளர்கள் பலர் களமிறங்கி யுள்ளனர். இரு தரப்பும் நாங் கள்தான் உண்மையான அதிமுக என கூறிவருவதால், உள்ளாட்சித் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

குடியரசுத் தலைவருடன் எம்.பி.க்கள் இன்று சந்திப்பு

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திப்பதற்காக ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்கள் டெல்லி சென்றுள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தலைமையிலான குழு, நேற்று பிற்பகல் டெல்லி புறப்பட்டுச் சென்றது. இக்குழுவில் செங்குட்டுவன் (வேலூர்), ஜெய்சிங் நட்டர்ஜி (தூத்துக்குடி), சுந்தரம் (நாமக்கல்), வனரோஜா (திருவண்ணாமலை), அசோக்குமார் (கிருஷ்ணகிரி), சத்யபாமா (திருப்பூர்), மருதராஜா (பெரம்பலூர்), ராஜேந்திரன் (விழுப்புரம்) மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் லட்சுமணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

டெல்லியில் குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கும் எம்.பி.க்கள் குழு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரி மனு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சட்டப்பேரவையில் கடந்த 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் குறித்தும் பிரணாப்பிடம் எம்.பி.க்கள் விளக்குவார்கள் என ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x